செய்திகள் உலகம்
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
பங்கொக்-
தாய்லாந்து நாட்டின் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலைத் தாய்லாந்து நாட்டின் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் முற்றிலுமாக மறுத்துள்ளார்.
முன்னதாக பிட்சானுலோக்கில் நடைபெறவிருந்த நடமாடும் அமைச்சரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஊகங்கள் எழுந்ததாக பாங்காக் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிகழ்வுகள், குறிப்பாக தாய்லாந்து-கம்போடியா எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றம் ஆகியவற்றின் காரணமாக இந்த ஒத்திவைப்பு செய்யப்பட்டதாக அனுடின் விளக்கினார்.
இருப்பினும், தத்தம் அமைச்சகங்களின் செயல்பாடுகளையும் சாதனைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்கத் தவறும் எந்தவொரு அமைச்சரின் அமைச்சரவை பதவியும் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
அரசாங்கத்தின் கொள்கைகள், சாதனைகள் மற்றும் நன்மைகளை மக்கள் பரவலாகப் புரிந்துகொள்வதை உறுதிசெய்ய, தகவல் தொடர்பு அம்சம் மேம்படுத்தப்பட வேண்டிய பலவீனங்களில் ஒன்றாகும் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
