செய்திகள் உலகம்
லாவோஸில் தங்கம் தேடச் சென்ற 7 பேர் குகையில் சிக்கினர்
வியன்டைன்:
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கியுள்ள ஏழு பேரை மீட்கும் முயற்சி மும்முரமாய்த் தொடர்கிறது.
தாய்லாந்து, ஃபின்லாந்து ஆகிய நாடுகளின் நிபுணர்களும் அந்தப் பணியில் உதவி வருகின்றனர்.
2018இல் தாய்லாந்தின் வடபகுதியில் உள்ள ஒரு குகையில் சிக்கிய இளையர் கால்பந்துக் குழுவினரை மீட்பதில் அவர்கள் பெரும்பங்காற்றினர்.
லாவோஸின் கிராமத்தினர் 7 பேர் தங்கம் தேடுவதற்காக ஒரு வாரத்துக்கு முன் குகைக்குச் சென்றனர்.
கனத்த மழையால் வெள்ளம் பெருகியதாலும் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் அவர்கள் வெளியேறும் வழி அடைபட்டது.
சுமார் 100 பேர் கூடிக் குகையிலிருந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.
இருப்பினும் மீட்புக் குழுவினர் குகைக்குள் உள்ளவர்களைச் சென்றடைய இயலவில்லை.
சிறப்புச் சாதனங்களும் நிபுணர்களும் தேவை என்று மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
