செய்திகள் விளையாட்டு
உலகின் முதல் நிலை சீன ஜோடியை சாய்த்த ஜிம்மி-சு யின்
கோலாலம்பூர்:
மலேசிய கலப்பு இரட்டையர் ஜோடியான ஜிம்மி வோங்-செங் சு யின், உலகின் முன்னணி நிலையில் இருக்கும் சீன ஜோடியான ஃபெங் யான் ஜே-ஹுவாங் டோங் பிங்கை வீழ்த்தி, சிங்கப்பூர் ஓபனில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர்.
வெறும் இரண்டாவது போட்டியிலேயே இந்த இளம் ஜோடி, போட்டியின் முதல் நிலை வீரர்களை 23-21, 21-16 என்ற நேர் செட் கணக்கில் 43 நிமிடங்களில் வீழ்த்தி, உலக பேட்மிண்டன் அரங்கையே திரும்பிப் பார்க்க வைத்தது.
முதல் செட்டில் பின்தங்கியிருந்த ஜிம்மி-சு யின், 20-20 என சமநிலையை உருவாக்கி ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரித்தனர். பரபரப்பான தருணத்தில் ஜிம்மியின் மின்னல் வேக ஸ்மாஷ், சீன ஜோடியைத் திணறடித்து முதல் செட்டை மலேசியாவுக்கு கைப்பற்றிக் கொடுத்தது.
இரண்டாவது செட்டில் 9-3 என அதிரடி முன்னிலை பெற்ற நாட்டு ஜோடி, அபார நம்பிக்கையுடன் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீன ஜோடி மீண்டும் போராடி 19-16 வரை நெருங்கினாலும், ஜிம்மியின் தாக்குதலான ஆட்டம் வெற்றியை உறுதிப்படுத்தியது.
கடந்த வாரம் மலேசியா மாஸ்டர்ஸில் முதல் சுற்றிலேயே வெளியேறிய ஜிம்மி-சு யின், இப்போது உலகின் முதல் நிலை ஜோடியை வீழ்த்தியிருப்பது, இவர்களின் அபார திறமையையும் எதிர்கால அச்சுறுத்தலையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியால் உற்சாகம் பெற்ற ஜிம்மி-சு யின், அடுத்த சுற்றில் இந்தியா அல்லது தைவான் ஜோடியை எதிர்த்து காலிறுதிக்கான வாய்ப்பைப் பிடிக்க களமிறங்கவுள்ளனர்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 10:11 am
உலகக் கிண்ணத்தை பிரேசில் அணி வெல்லும்: கார்லோ அன்செலோட்டி
May 26, 2026, 10:04 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 24, 2026, 9:40 am
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
