செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர நிர்வாகியாக கேரிக் நியமிக்கப்பட்டார்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக்கில் கிளப்பை மூன்றாவது இடத்திற்கு வழிநடத்தியதைத் தொடர்ந்து, மைக்கல் கேரிக் தங்களின் நிரந்தர நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை மென்செஸ்டர் யுனைடெட் உறுதி செய்துள்ளது.
புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, மைக்கல் கேரிக் தலைமைப் பயிற்சியாளராகத் தொடர்வார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
முன்னாள் அணி வீரரான 44 வயதான கேரிக், ஜனவரியில் ரூபன் அமோரிம் பணி நீக்கம் செய்யப்பட்ட பிறகு இடைக்கால அடிப்படையில் பொறுப்பேற்று, அணியை சாம்பியன்ஸ் லீக் தகுதி இடத்திற்கு வழிநடத்தினார்.
அதன் அடிப்படையில் அவர் நிரந்தர நிர்வாகியாக நியமிக்கப்படுகிறார் என்று மென்செஸ்டர் யுனைடெட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னதாம 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கு வந்ததிலிருந்து, மென்செஸ்டர் யுனைடெட்டின் மாயாஜாலத்தை அனுபவித்திருக்கிறேன்.
இந்தச் சிறப்புமிக்க கிளப்பை வழிநடத்தும் பொறுப்பை ஏற்பது எனக்கு மிகுந்த பெருமையைத் தருகிறது என்று கேரிக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 22, 2026, 9:23 am
உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
May 22, 2026, 9:09 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் ரொனால்டோ களமிறங்குகிறார்
May 21, 2026, 9:09 am
