செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ணத்தை பிரேசில் அணி வெல்லும்: கார்லோ அன்செலோட்டி
பாரிஸ்:
ஐரோப்பிய சவால்தாரர்களிடமிருந்து உலகக் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றும் பிரேசிலின் முயற்சி இப்போது ஐரோப்பிய பயிற்சியாளரான கார்லோ அன்செலோட்டியின் மீது விழுந்துள்ளது.
நாட்டின் ஆறாவது உலகக் கிண்ண பட்டத்திற்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் கடைசியாக உலகக் கிண்ணத்தை வென்று 24 ஆண்டுகள் ஆகின்றன.
1970இல் பெலே ஜூல்ஸ் ரிமெட் கிண்ணத்தை தூக்கியதற்கும், 1994இல் பிரேசில் மீண்டும் முதலிடத்திற்குத் திரும்பியதற்கும் இடையில் அவர்கள் காத்திருந்த அதே காலக்கட்டம் தான் இது.
66 வயதான கார்லோ அன்செலோட்டிக்கு உலகக் கிண்ண மேடையில் இன்னும் முடிக்கப்படாத பணிகள் உள்ளன.
மேலும் பிரேசில் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான சரியான பாதையில் செல்வதாகத் தெரிகிறது.
நான் உலகக் கிண்ணத்தை வெல்வதில் வெறி கொண்டிருக்கவில்லை.
ஆனால் உலகின் மிக முக்கியமான தேசிய அணியின் பயிற்சியாளராக இந்தத் தருணத்தை நான் ரசித்து மகிழ்கிறேன் என்று முன்னாள் ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் சமீபத்தில் கார்டியன் பத்திரிகைக்கு இவ்வாறு தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 10:04 am
மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 24, 2026, 9:40 am
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர நிர்வாகியாக கேரிக் நியமிக்கப்பட்டார்
May 22, 2026, 9:23 am
