செய்திகள் விளையாட்டு
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
கோலாலம்பூர்:
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) ஜூன் மாத சர்வதேச போட்டி சாளரம் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஹரிமாவ் மலாயாவுக்கான நட்புப் போட்டிகள் இன்னும் அறிவிக்கப்படாதது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 1 முதல் 9 வரை நடைபெறும் FIFA சர்வதேச சாளரத்தில், மலேசியாவும் வியட்நாமும் மட்டும் போட்டியின்றி ஓய்வில் இருக்கும் ஆசியான் அணிகளாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், இந்தோனேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற அணிகள் ஏற்கனவே பல சர்வதேச நட்புப் போட்டிகளை ஏற்பாடு செய்து தீவிரத் தயாரிப்பில் இறங்கியுள்ளன.
முன்னாள் தேசிய வீரர் ரஸ்மான் ரோஸ்லான், “நட்புப் போட்டிகள் இல்லையெனில், FIFA தரவரிசை புள்ளிகளைச் சேகரிக்கும் அரிய வாய்ப்பை மலேசியா இழக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார். தற்போது உலக தரவரிசையில் 138வது இடத்தில் உள்ள ஹரிமாவ் மலாயாவுக்கு, இந்த போட்டிகள் மிக முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், புதிய வீரர்களைச் சோதித்து பார்க்கவும், அணியின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்பட வேண்டியிருந்ததாக அவர் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், தேசிய அணியின் முன்னாள் நட்சத்திர முன்கள வீரர் சஃபீ சாலி, “பயிற்சியாளர்கள் தனிப்பட்ட திட்டங்களை வைத்திருக்கலாம். ஆனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் விடுவது தேசிய அணிக்கே பெரிய இழப்பாகும்” என்று கூறியுள்ளார்.
வரவிருக்கும் ஆசியான் கோப்பைக்கான தயாரிப்பில் இருக்கும் மலேசிய அணி, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மியான்மர், லாவோஸுடன் கடுமையான குழுவில் இடம்பெற்றுள்ளது. எனவே, போட்டித் தயாரிப்பின்றி களமிறங்குவது அணிக்கு சவாலாக மாறக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர நிர்வாகியாக கேரிக் நியமிக்கப்பட்டார்
May 22, 2026, 9:23 am
உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
May 22, 2026, 9:09 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் ரொனால்டோ களமிறங்குகிறார்
May 21, 2026, 9:09 am
