செய்திகள் விளையாட்டு
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்தது
புக்கிட் ஜாலில்:
தொடர்ந்து நான்காவது முறையாக மலேசியக் கிண்ணத்தை வென்று ஜேடிதி அணி வரலாறு படைத்துள்ளது.
புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜேடிதி அணியினர் கூச்சிங் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேடிதி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் கூச்சிங் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ஜேடிதி அணியின் வெற்றி கோல்களை
மார்கோஸ் கில்ஹெர்ம், அரிப் அய்மான் ஆகியோர் அடித்தனர்
இந்த வெற்றியின் மூலம் ஜேடிதி அணி தொடர்ந்து நான்கு மலேசியக் கிண்ணத்தை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
மேலும் மலேசியா கிண்ணம் ஜேடிதி, அணிக்கு ஒரு புகழ்பெற்ற பருவத்தின் சரியான முடிவாக அமைந்தது.
அவர்கள் ஏற்கனவே தொடர்ச்சியாக 12 முறை கான்ட்ரிபியூஷன் கிண்ணம், எப்ஏ கிண்ணம், சூப்பர் லீக் கிண்ணம் ஆகியவற்றை வென்றுள்ளனர்.
மேலும் 108 லீக் போட்டிகளில் தோல்வியடையாமல் உலக சாதனை படைத்துள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 4:43 pm
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர நிர்வாகியாக கேரிக் நியமிக்கப்பட்டார்
May 22, 2026, 9:23 am
உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
May 22, 2026, 9:09 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
