நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்

மோன்ட்ரெய்ல்:

ஏழு முறை பார்முலா ஒன்  உலக சாம்பியனான லூயிஸ் ஹாமில்டன், 22 வருட காத்திருப்புக்குப் பிறகு அர்செனல் அணி இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றபோது தான் கண் கலங்கியதாக ஒப்புக்கொண்டார்.

ஃபெராரி ஓட்டுநரும், தீவிர அர்செனல் ஆதரவாளருமான அவர்,

இந்த வெற்றியானது, ஸ்டீவனேஜில் தனது சகோதரி தன்னை லண்டன் கிளப்பை ஆதரிக்குமாறு கட்டாயப்படுத்திய தனது குழந்தைப்பருவ நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததாகக் கூறினார்.

மென்செஸ்டர் சிட்டி அணி போர்ஸ்மௌத் அணியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்ததைத் தொடர்ந்து,  அர்செனல் அணி பிரிமியர் லீக் ​​சாம்பியனாக உறுதி செய்யப்பட்டது.

உண்மையைச் சொல்லப்போனால், நான் கண்ணீர் சிந்தினேன்.

எனக்கு ஐந்து வயதாக இருந்தபோது, ​​ஸ்டீவனேஜில் உள்ள எனது சொந்த ஊரில் கால்பந்து விளையாடியது நினைவிருக்கிறது.
அந்தப் பகுதியில் நான் மட்டுமே கறுப்பினச் சிறுவனாக இருந்தேன், எல்லோரும் வெஸ்ட் ஹாம், டோட்டன்ஹாம், மென்செஸ்டர் யுனைடெட் அணிகளை ஆதரித்தார்கள்.

என் சகோதரன் என் கையைக் கிள்ளி, நீ அர்செனல் அணியை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னான்.

சில நாட்களுக்கு முன்பு அதை நினைவுகூர்ந்தபோது நாங்கள் சிரித்தோம் என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset