செய்திகள் விளையாட்டு
மீண்டும் களமிறங்கும் ‘பேர்லி-தினா’ ஜோடி
கோலாலம்பூர்:
மலேசியாவின் நட்சத்திர மகளிர் இரட்டையர் ஜோடியான பேர்லி டான் – எம். தினா, காயம் காரணமாக ஏற்பட்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இணைந்து சிங்கப்பூர் ஓபனில் களமிறங்க உள்ளனர்.
முதுகுக் காயத்தால் கடந்த சில வாரங்களாக ஓய்வில் இருந்த பேர்லி, தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் போட்டித் தயார்நிலைக்குத் திரும்பியுள்ளதாக மகளிர் இரட்டையர் தலைமைப் பயிற்சியாளர் ரோஸ்மான் ரசாக் உறுதிப்படுத்தியுள்ளார்.
உலகின் இரண்டாம் நிலை ஜோடியாக திகழும் பேர்லி-தினா, அண்மையில் நடைபெற்ற மலேசியா மாஸ்டர்ஸ் 2026 போட்டியில் இருந்து விலகியிருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சீனாவின் நிங்போவில் நடைபெற்ற ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் போது ஏற்பட்ட முதுகுக் காயமே அதற்குக் காரணமாக இருந்தது.
இதன் காரணமாக, டென்மார்க்கில் நடைபெற்ற உபர் கோப்பை தொடரிலும் பேர்லி பங்கேற்கவில்லை. ஆனால் தற்போது, “இன்ஷா அல்லாஹ், பேர்லி-தினா மீண்டும் களத்தில்” என்ற ரோஸ்மானின் அறிவிப்பு, மலேசிய பூப்பந்து ரசிகர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் ஓபனின் முதல் சுற்றில், தைவானின் ஹு லிங் ஃபாங் – ஜெங் யூ சியே ஜோடியை எதிர்கொள்ள பேர்லி-தினா தயாராக உள்ளனர். ரசிகர்கள் தற்போது இந்த ‘கம்பேக்’ ஜோடி மீண்டும் வெற்றிப் பயணத்தை தொடங்குமா என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 23, 2026, 3:36 pm
நட்புப் போட்டிகள் இன்றி ‘ஹரிமாவ் மலாயா’ பின்னடைவைச் சந்திக்குமா?
May 23, 2026, 9:53 am
அர்செனல் பிரிமியர் லீக் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து ஹாமில்டன் கண் கலங்கினார்
May 23, 2026, 9:53 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் நிரந்தர நிர்வாகியாக கேரிக் நியமிக்கப்பட்டார்
May 22, 2026, 9:23 am
உலகக் கிண்ண அணியில் இடம் பிடித்த நெய்மார்: உற்சாகத்தில் ரசிகர்கள்
May 22, 2026, 9:09 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் ரொனால்டோ களமிறங்குகிறார்
May 21, 2026, 9:09 am
