நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2026 உலகக் கோப்பையைக் கலக்கவுள்ள 5 சூப்பர் ஸ்டார்கள்: ரசிகர்கள் மூச்சுத்திணற காத்திருக்கும் கால்பந்து திருவிழா

பாரிஸ்: 

இன்னும் மூன்று வாரங்களில் உலகையே அதிரவைக்கவுள்ள 2026 FIFA உலகக் கோப்பை தொடங்கவுள்ள நிலையில், உலகின் முன்னணி கால்பந்து நட்சத்திரங்களைச் சுற்றி பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த முறை, அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறும் பிரம்மாண்ட தொடர், 48 அணிகள் கொண்ட புதிய வடிவத்தில் வரலாற்றை எழுதவுள்ளது.

ஆனால் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கும் சில முக்கிய நட்சத்திரங்கள் பட்டியல்

கைலியான் எம்பாப்பே - உலக சாதனையை உடைக்க வரும் ‘வேகப் புயல்’
பிரான்சின் நம்பிக்கை நட்சத்திரமான எம்பாப்பே, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை நோக்கி பாய்கிறார்.

மிரோஸ்லாவ் க்ளோஸின் 16 கோல் சாதனையை சமன் செய்ய இன்னும் 4 கோல்கள் மட்டுமே தேவையாக உள்ள நிலையில் ஹாம்ஸ்ட்ரிங் காயம், கோப்பையில்லா சீசன் அவரது மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

எர்லிங் ஹாலாண்ட் – 28 ஆண்டுகள் காத்திருந்த நோர்வேயின் ‘கோல் மெஷின்’

49 சர்வதேச போட்டிகளில் 55 கோல்கள், மான்செஸ்டர் சிட்டியின் அதிரடி வேட்டைக்காரன் ஹாலாண்ட், நோர்வேயை உலக மேடையில் மீண்டும் உயர்த்தும் கனவுடன் களமிறங்குகிறார். பிரான்ஸ், செனகல் போன்ற அணிகளை எதிர்கொள்ளும் ‘மரணக் குழுவில்’ அவரது திறமை சோதிக்கப்படவுள்ளது.

வினிசியஸ் ஜூனியர் – பிரேசிலின் அடுத்த பேரரசனா?

நெய்மரின் திரும்புவரவு பேசப்பட்டாலும், பிரேசிலின் உண்மையான நம்பிக்கை தற்போது வினிசியஸ் ஜூனியர் மேல் திரும்பியுள்ளது. ரியல் மாட்ரிட் சூப்பர் ஸ்டார், தனது தேசிய அணிக்காக இன்னும் முழு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளார்.

 ஹாரி கேன் – இங்கிலாந்தின் கோப்பை சாபத்தை உடைப்பாரா?

58 கோல்கள் அடித்து ஐரோப்பாவையே அதிரவைத்த ஹாரி கேன், இப்போது தனது முதல் சர்வதேச கோப்பையை குறிவைத்துள்ளார்.
இந்த முறை, உலகக் கோப்பைக்காக அவரை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க பேயர்ன் முனிச் தனி திட்டமே வகுத்துள்ளது.

லாமின் யமால் – ஸ்பெயினின் இளம் அதிசயம் நேரத்துடன் போராடுகிறது

18 வயதிலேயே உலக கால்பந்தின் புதிய முகமாக மாறியுள்ள லாமின் யமால், தற்போது காயத்திலிருந்து மீள போராடி வருகிறார். 2024 யூரோ தொடரில் மின்னல் போல பிரகாசித்த இந்த இளம் நட்சத்திரம், முழு உடற்தகுதியுடன் திரும்புவாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கோப்பை காய்ச்சல் தொடங்கிவிட்டது. உலகின் பார்வை இப்போது இந்த ஐந்து வீரர்கள்மீது திரும்பியுள்ளது. யார் வரலாறு படைப்பார்கள்? யார் அழுத்தத்தில் சரிவார்கள்? யார் உலகக் கோப்பையை தூக்கி உலக நாயகனாக மாறுவார்?

2026 உலகக் கோப்பை, கால்பந்தின் புதிய யுகத்தை தொடங்கவிருக்கிறது

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset