நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் ரொனால்டோ களமிறங்குகிறார்

லிஸ்பன்:

கால்பந்து வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் கால்பந்து அணி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கிண்ண கால்பந்து போட்டி வரும் ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. 

முதல் முறையாக 48 அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றன.

உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான போர்த்துகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

26 பேர் கொண்ட இந்த அணியில் உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ளார்.

41 வயதான அவர் போர்த்துகல் அணிக்கு கேப்டனாக செயல்படுவார்.

மேலும் ரொனால்டோ 6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் விளையாட உள்ளார். 

இதற்கு முன்பு 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய 5 உலகக் கிண்ண போட்டியில் விளையாடி இருந்தார். 

இதில் அதிகபட்சமாக 2006ல் 4ஆவது இடத்தை போர்த்துகல் அணி பிடித்தது. 

கடந்த உலகக் கிண்ண போட்டியில்  போர்த்துகல் காலிறுதி வரை வந்து 8ஆவது இடத்தை பிடித்தது.

6ஆவது உலகக் கிண்ண போட்டியில் விளையாடுவதன் மூலம் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைப்பார். 

லியோனல் மெஸ்சி உள்பட 5 வீரர்கள் 5 உலகக் கிண்ண போட்டியில் விளையாடி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset