நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சாம்பியன்

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

கிங் ஃபஹத் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் டமாக் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் டமாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார்.

மற்ற கோல்களை சாடியோ மனே, கிங்ஸ்லே கோமன் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் 86 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தனர்.

அதே வேளையில் சவூதி புரோ லீக் கிண்ணத்தையும் அல் நசர் அணியினர் வென்றுள்ளனர்.

இந்த வெற்றியை கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான அல் நசர் அணியினர் கொண்டாடி வருகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset