நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா

கோலாலம்பூர்: 

நாட்டின் மகளிர் பூப்பந்து ஒற்றையர் வீராங்கனை கே. லெட்ஷானா, ஜப்பானின் போட்டியின் மூன்றாவது தேர்வு வீராங்கனையான தோமோகா மியாஸாக்கியை வெளியேற்றி, இன்று புக்கிட் ஜாலிலில் உள்ள உனிஃபி அரங்கில் நடைபெற்ற மலேசியா மாஸ்டர்ஸ் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

உலகின் 32வது தரவரிசையில் உள்ள லெட்ஷானா, ஆரம்பத்திலிருந்தே ஆட்டத்தை ஆதிக்கம் செய்து, மிகவும் சுறுசுறுப்பான செயல்திறனை வெளிப்படுத்தினார். 

உலகின் ஒன்பதாவது தரவரிசை வீராங்கனையை, 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில், 45 நிமிடங்களில் வெற்றி பெற்றார்.

2025 ஆம் ஆண்டு ஆசிய பூப்பந்து சாம்பியன்ஷிப், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற ஜெர்மன் ஓபன் போட்டிகளில், தோமோகாவிடம் நடைபெற்ற முந்தைய இரண்டு சந்திப்புகளிலும் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்த வெற்றி 23 வயதான வீராங்கனையின் ஏமாற்றத்தைத் துடைத்தது.

அந்த வெற்றி, அரையிறுதிக்கான டிக்கெட்டிற்காக, சீனாவின் ஹான் கியான் ஷி, ஜப்பானின் ஹினா அகேச்சி ஆகியோருக்கு இடையிலான வெற்றியாளரை எதிர்கொள்ளும் பாதையை லெட்ஷானாவிற்குத் திறந்துள்ளது.

இதற்கிடையில், நாட்டின் வீராங்கனை கோ ஜின் வெய், 13-21, 16-21 என்ற செட் கணக்கில், 27 நிமிடங்களில் இந்தியாவின் அஷ்மிதா சலிஹாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவரது பயணம் இரண்டாவது சுற்றிலேயே முடிவுக்கு வந்தது.

சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset