செய்திகள் விளையாட்டு
30 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று அஸ்டன் வில்லா சாதனை
லண்டன்:
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பின் கிண்ணத்தை வென்று அஸ்டன் வில்லா அணியினர் சாதனை படைத்துள்ளனர்.
இஸ்தான்புல் அரங்கில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் அஸ்டன்வில்லா அணியினர் எஸ்சி பிராய்பர்க் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்டன்வில்லா அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி பிராய்பர்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அஸ்டன் வில்லா அணியின் வெற்றி கோல்களை யூரி டைலிமன்ஸ், எமிலியானோ பியூண்டியா, மோர்கன் ரோஜர்ஸ் ஆகியோர் அடுத்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து அஸ்டன் வில்லா அணியினர் ஐரோப்பா லீக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
மேலும் அஸ்டன் வில்லா அணி தனது 30 ஆண்டு கால கோப்பைக்கான காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது.
சமீப காலங்களில் கான்ஃபரன்ஸ் லீக் அரையிறுதி, சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகளில் தோல்வியுற்ற பிறகு,
நிர்வாகி உனேய் எமெரி தனது மூன்றாவது முயற்சியில் ஐரோப்பிய வெற்றியை வில்லா பார்க்கிற்கு மீண்டும் கொண்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 5:31 pm
ஜப்பானின் முன்னணி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் லெக்ஷனா
May 21, 2026, 9:18 am
6ஆவது முறையாக உலகக் கிண்ண போட்டியில் ரொனால்டோ களமிறங்குகிறார்
May 20, 2026, 10:51 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அர்செனல் பிரீமியர் லீக் சாம்பியன் பட்டம் வென்றது
May 20, 2026, 10:29 am
2026 செபாக் தக்ராவ் உலகக் கோப்பை: சுவடுகள் பதித்த தேசிய அணி
May 19, 2026, 9:29 am
பெப் குவார்டியோலா இந்த சீசனின் முடிவில் மென்செஸ்டர் சிட்டியை விட்டு வெளியேறுகிறார்
May 19, 2026, 9:26 am
22 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்லும் தருவாயில் அர்செனல் அணி
May 18, 2026, 9:42 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
May 18, 2026, 9:40 am
