செய்திகள் மலேசியா
“போராட்டப் பாதையை மறந்த அரசியல்வாதிகள்தான் அதிகம் புலம்புகிறார்கள்": அன்வரின் காரசார தாக்கு
கோலாலம்பூர்:
“சிறு வியாபாரிகள் அல்ல… தங்கள் அசல் போராட்ட இலட்சியத்திலிருந்து வழிதவறிய அரசியல்வாதிகள்தான் இன்று அதிகமாக புலம்பி அலட்டிக்கொள்கிறார்கள்", என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் சுட்டிக்காட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாமான் மெலாவத்தி பசார் தானி சந்தைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது பேசிய பிரதமர், சிறு வணிகர்களின் மன உறுதியை அவர் வியப்புடன் சிலாகித்துப் பாராட்டினார்.
“கீழ்மட்ட வியாபாரிகள் மிகக் குறைவாகவே குறை கூறுகிறார்கள். ஆனால் பெரிய வணிகத்துறையினரும் சில அரசியல்வாதிகளும் தான் இடைவிடாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்,” என்று அவர் கூறினார்.
மேலும்,“எப்போதும் முனகி, புலம்பி, குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் சாதாரண மக்கள் அல்ல… சில குறிப்பிட்ட அரசியல்வாதிகள்தான்,” என அவர் கிண்டலாகத் தாக்கினார்.
அரசியல் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டபோதும், அதற்கு விரிவாக பதிலளிக்க மறுத்த அன்வர்,
“இன்று அரசியல் பேச வேண்டாம்… அரசியல் என்றால் நாசி டாகாங் சாப்பிடுவதுதான்!” என்று நகைச்சுவையுடன் கூறியதும் அங்கிருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
