செய்திகள் மலேசியா
ஏழை மக்களுக்காக இரண்டு டன் சாடோ மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது
கோலா திரங்கானு:
இந்த புதன்கிழமை தியாகத் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சுமார் இரண்டு டன் மாட்டிறைச்சி ஏழை மக்களுக்கு விநியோகிக்கப்படும்.
சாரோலே இனச் சாடோ மாட்டிறைச்சியின் விநியோகம், அனைத்து அறுக்கும் பணிகளும் (அறுத்தல், தோல் உரித்தல், வெட்டுதல்) முடிந்த பின்னர் மேற்கொள்ளப்படும்.
இங்குள்ள கம்போங் குபாங் பரிட்டைச் சேர்ந்த 58 வயதான ஒரு கால்நடை விநியோகிப்பாளர் முஹம்மத் ஸுல்கிஃப்லி எம்போங், இந்த புதன்கிழமை குர்பான் கடமைக்காக, அவரது இரண்டு வாடிக்கையாளர்கள் மூன்று சாரோலே இனச் சாடோ மாடுகளை முன்பதிவு செய்துள்ளனர்.
குர்பான் கடமைக்கான அனைத்து கால்நடைகளும் (மூன்று சாடோ மாடுகள் உட்பட) அண்டை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படாது. உள்ளூர் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டதாக அவர் கூறினார்.
"இரண்டு வாடிக்கையாளர்கள், அறுத்தல், தோல் உரித்தல் உள்ளிட்ட அனைத்து செயல்முறைகளையும் நாங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
"இந்த ஆண்டு குர்பான் கடமைக்கான சாடோ மாட்டிற்கான தேவை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. ஏனெனில், அளவைப் பொறுத்து, ஒரு மாட்டின் விலை 14,000 ரிங்கிட், 20,000 ரிங்கிட்டுக்கு இடையில் உள்ளது" என்று இன்று தனது அவர் கூறினார்.
இந்த புதன்கிழமை குர்பான் கடமைக்கான 40 சாதாரண மாடுகளுக்கான முன்பதிவுகளையும் தான் பெற்றுள்ளதாக முஹம்மத் ஸுல்கிஃப்லி உறுதிப்படுத்தினார்.
குர்பான் பங்கேற்பாளர் முஹம்மத் ஃபாடில் முஹம்மது (38), அனைத்து சாடோ மாட்டிறைச்சியும், B-40-ன் கீழ் வகைப்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கும், சமூகத்தினருக்கும் விநியோகிக்கப்படும் என்றார்.
"சுமார் இரண்டு மெட்ரிக் டன் மாட்டிறைச்சி, குர்பான் கடமையைச் செய்ய இயலாத மக்களுக்கு விநியோகிப்போம்.
"இந்த புதன்கிழமை, ஹஜ்ஜுப் பெருநாள் முதல் நாளில் விநியோகிப்பதற்காக, ஏழை, B-40-ன் கீழ் உள்ள மக்களை நாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளோம்" என்று அவர் கூறினார்.
பல பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளருமான முஹம்மத் ஃபாடில், இந்த ஆண்டு, சுமார் இரண்டு மெட்ரிக் டன் எடை கொண்ட இரண்டு சாடோ மாடுகள் குர்பான் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 11:02 am
காசா குறித்து மலேசியா மௌனம் காக்காது: அமிருதீன் சூளுரை
May 25, 2026, 9:59 am
பெட்ரோனாஸ் FSO செப்பாட் தளத்தில் விபத்து: 3 பேர் பலி: பெட்ரோனாஸ் அறிவிப்பு
May 24, 2026, 10:51 pm
