செய்திகள் மலேசியா
இந்தியத் தூதர் பி என் ரெட்டி அவர்கள் இனங்களை, மதங்களைக் கடந்த ஒரு மனிதாபிமானியாக தனது பதவிக் காலம் முழுவதும் செயல்பட்டார் டத்தோ வீரா ஷாகுல் தாவூத்
புச்சோங்:
மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி என் ரெட்டிக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி முக்மின் அமைப்பின் இடைக்காலத் தலைவர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் தலைமையில் இன்று நடைபெற்றது.
அவர் தனது உரையில், மலேசிய இந்திய தூதரகத்திற்கும் மலேசிய இந்திய முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவுகள் என்றென்றும் தொடரும். மாண்புமிகு பி என் ரெட்டி இந்தியத் தூதராக நியமனம் பெற்ற பிறகு எத்தனையோ சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மலேசிய இந்திய முஸ்லிம்களும், வர்த்தகர்களும் தூதரகத்துடன் நெருக்கமான உறவு வைத்துள்ளனர்.
நமது தொப்புள்கொடி உறவாக இருக்கிற இந்தியாவுடன் நாம் எப்போதும் இணைந்தே பயணித்து வருகிறோம்.
முக்மின் அமைப்பினால் மிகக் குறுகிய கால ஏற்பாடாக இந்தப் பிரியாவிடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
பி என் ரெட்டி அவர்கள் இனங்களை, மதங்களைக் கடந்த ஒரு மனிதாபிமானியாக தனது பதவிக் காலம் முழுவதும் செயல்பட்டார். மலேசியாவில் உள்ள இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சினைகளையும் உடனுக்குடன் தீர்வு காண முயற்சித்தார்.
கோவிட் காலத்திலும் கோவிட்டுக்கு பிறகும் இந்தியத் தொழிலாளர் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் பி என் ரெட்டி தலைமையிலான இந்தியத் தூதரகத்தின் செயல்பாடுகள் போற்றத்தக்கதாக இருந்தது.
இங்கு இந்த நிகழ்வில் கலந்துகொள்ள கூடியுள்ள ஒவ்வொரு பிரமுகரும் ஒவ்வொரு அமைப்பை சேர்ந்த முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரையும் முக்மின் அமைப்பின் சார்பில் நான் வரவேற்கிறேன் என்று டத்தோ வீரா ஷாகுல் தனது உரையில் பேசினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 2:53 pm
ஏழை மக்களுக்காக இரண்டு டன் சாடோ மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது
May 25, 2026, 11:02 am
