செய்திகள் மலேசியா
தீவிரவாதக் கருத்துகளையும், இனவாதத் தூண்டுதல்களையும் அரசு மேலும் உறுதியாகக் கையாள வேண்டும்: கணபதிராவ்
கிள்ளான்:
தீவிரவாதக் கருத்துகளையும், இனவாதத் தூண்டுதல்களையும் அரசு மேலும் உறுதியாகக் கையாள வேண்டும்.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் இதனை வலியுறுத்தினார்.
தீவிரவாதக் கருத்துக்கள், இன, மத ரீதியான ஆத்திரமூட்டல்களுக்கு எதிராக அரசாங்கம் மேலும் உறுதியாகவும், விரைவாகவும், தொடர்ச்சியாகவும் செயல்பட வேண்டும்.
இல்லையென்றால், வெறுப்பையும் அவதூறையும் நிராகரிக்குமாறு மலேசியர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த அழைப்பு வீணாகிவிடும்.
பல மலேசியர்களாலும் உணரப்பட்ட, அரசாங்கத்தின் மிகப்பெரிய பலவீனம் என்று அவர் விவரித்ததை விமர்சிப்பதாக கணபதிராவ் கூறினார்.
குறிப்பாக, இந்திய சமூகத்தின் உணர்வுகளை உள்ளடக்கிய பல பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் விதம் குறித்த கண்ணோட்டம் இதில் அடங்கும்.
எதிர்மறையான கண்ணோட்டங்களைத் தூண்டிய பிரச்சினைகளில், 2024-ல் கேகே மார்ட் வசதிக் கடைகளில் 'அல்லாஹ்' என்ற வார்த்தை அச்சிடப்பட்ட காலுறைகள் விற்கப்படுவது குறித்த சர்ச்சை, இந்தியர்களுக்கு எதிராக இனவெறிச் சொற்களைப் பயன்படுத்துதல், இந்து கோவில்களை ஹராம் என்று முத்திரை குத்தும் செயல் ஆகியவை அடங்கும்.
உணர்வற்ற சர்ச்சைகளும், வெறுப்பைத் தூண்டும் கூற்றுகளும் எழும்போது. அதற்கான எதிர்வினை பெரும்பாலும் தாமதமானதாகவோ, முரண்பாடானதாகவோ அல்லது போதுமான வலுவற்றதாகவோ கருதப்படுகிறது.
இது தீவிரவாதக் குரல்கள் மேலும் வலுப்பெற வழிவகுப்பதோடு, பொது விவாதங்களில் சகிப்புத்தன்மை இல்லை.
ஆத்திரமூட்டுதல் இயல்பாக்கப்பட்டு வருகிறது என்றும் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது என்று கணபதிராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
