செய்திகள் மலேசியா
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
ஜொகூர்பாரு:
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது.
ஜொகூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை தெரிவித்தார்.
15ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியைத் தொடர்ந்து, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி பதவி விலக வேண்டும் என்று தான் முன்பு அழைப்பு விடுத்திருந்திருந்தேன்.
இதைத் தொடர்ந்து ஜொகூர் அரச குடும்பத்தின் அறிவுரையின் காரணமாகவே அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டதாக அவர் தெரிவித்தார்.
ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம், பட்டத்து இளவரசர், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் ஆகியோர், தனது அறிக்கை வரம்பு மீறியது.
நிலைமையைச் சரிசெய்வதே சிறந்த நடவடிக்கை என்றும் தனிப்பட்ட முறையில் தனக்கு அறிவுரை வழங்கியதாக அவர் கூறினார்.
மன்னிப்புக் கேட்டுவிட்டு ஜாஹிட்டை சென்று பார்ப்பது சரிதான் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
மேலும் நாம் ஆள வேண்டிய ஒரு மாநிலம் இருக்கிறது என்று அவர் கெலுவார் செகேஜாப் என்ற அரசியல் பாட்காஸ்டின் 200ஆவது அத்தியாயத்தில் கூறினார்.
அதன் பின்னர், தான் ஜாஹிட்டை சந்தித்து நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்டதாக ஓன் ஹபிஸ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
