நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்

செந்தோசா:

கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து பள்ளி வாரியம், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தப் பள்ளிக்கான நிலம் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும், கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படாதது மிகுந்த கவலை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தற்போது பள்ளியில் வகுப்பறைகள் பற்றாக்குறை, மோசமான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல சவால்கள் நிலவுகின்றன. இதற்கு உடனடி தீர்வு அவசியமாகியுள்ளது.

இந்த விவகாரத்தை விரைவுபடுத்துவதற்காக கல்வி துணையமைச்சர் வோங் கா வோவின் உதவியை கோரியுள்ளதாகவும் குணராஜ் தெரிவித்தார்.

மேலும், பள்ளி கட்டுமான முயற்சிகளை விரைவாக நிறைவேற்றும் நோக்கில் ஒரு சிறப்பு செயல் குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அந்தக் குழுவின் மூலம் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் நலனுக்காக பள்ளி கட்டுமானத்தை விரைவில் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset