நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“மனிதாபிமானப் பணிகளில் இருந்து இனி என்னை விலக்காதீர்கள்”: கேப்டன் சிவாவின் உருக்கமான வேண்டுகோள்

செப்பாங்:

“நான் ஒரு மலேசிய இந்தியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன்… GSF 2.0 பணியில் இருந்த முழு நேரமும் மலேசிய மக்களின் பிரார்த்தனைகள் எனக்கு பேராற்றலாக இருந்தது,” என குளோபல் சுமுட் ஃப்ளோட்டிலா (GSF 2.0) மனிதாபிமானப் பணியில் பங்கேற்ற கேப்டன் சிவா எனப்படும் பத்மநாதன் சிவசாமி உருக்கமாக தெரிவித்தார்.

காசா மக்களின் உண்மை நிலை, அவர்கள் அனுபவிக்கும் வேதனை, போரின் கொடுமைகளை நேரடியாக உணர்ந்த இந்த அனுபவம், தனது மனிதாபிமான உணர்வை மேலும் வலுப்படுத்தியதாக அவர் கூறினார்.

பாலஸ்தீன நிலத்தை அடையும் முன்பே பல தடைகள், அச்சுறுத்தல்கள், சவால்களை எதிர்கொண்ட போதிலும், மலேசிய மக்களின் ஆதரவும் பிரார்த்தனைகளும் அனைத்து பிரதிநிதிகளுக்கும் தைரியம் அளித்ததாக கேப்டன் சிவா பகிர்ந்துகொண்டார்.

“இனிமேல் எந்த மனிதாபிமானப் பணியிலிருந்தும் என்னை விலக்காதீர்கள்… பாலஸ்தீனப் போராட்டத்துடன் நான் தொடர்ந்து நிற்பேன்,” என அவர் உணர்ச்சிபூர்வமாக வேண்டுகோள் விடுத்தார்.

GSF 2.0 மலேசிய பிரதிநிதிகள் நாடு திரும்பிய வரவேற்பு நிகழ்வில் பேசிய அவர், தனது 10 வயது மகன் கூறிய வார்த்தைகளையும் பகிர்ந்தார்:
“அப்பா, காசாவுக்குச் செல்லுங்கள்… திரும்பி வராவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் 10 ஆண்டுகளில் நானும் தன்னார்வலராக அந்தப் பாதையில் நடப்பேன்,” என்ற அந்தச் சிறுவனின் வார்த்தைகள் அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தின.

மேலும், மனிதாபிமானக் குழுவினர் சந்தித்த கஷ்டங்கள், உண்மையான பாலஸ்தீன மக்களின் தினசரி துயரங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது என்றும் அவர் கூறினார்.

இறுதியாக, “காசா மக்களுக்கான ஆதரவை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்… மனிதாபிமானத்தின் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும்,” என மலேசிய மக்களிடம் அவர் அழைப்பு விடுத்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset