செய்திகள் மலேசியா
செப்பாட் எண்ணெய் தள விபத்து: பலியான 3 தொழிலாளர்களுக்கும் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்த துயரச் சம்பவம்
கோலா திரங்கானு:
நேற்று நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செப்பாட் எண்ணெய் தளச் சோகத்தில் பாதிக்கப்பட்ட மூவரின் பிரேத பரிசோதனை முடிவுகள், ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும் வெவ்வேறு இறப்புக் காரணங்களை வெளிப்படுத்தியுள்ளன.
கோலா திரங்கானு மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் அஸ்லி முஹம்மத் நூர், முதல் பாதிக்கப்பட்டவர் நிக் முஹம்மத் ஹாஃபிஃபி அப்துல் மஜித், அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இறந்ததாக உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், இரண்டாவது பாதிக்கப்பட்டவர் முஹம்மத் ஃபாஎஸுவான் ஹக்கிம் முஹம்மத் புஸ்தமான், கழுத்தில் ஏற்பட்ட கடுமையான காயம் காரணமாக இறந்தார்.
மூன்றாவது பாதிக்கப்பட்டவர் அஹ்மத் ஃபிக்ரி ஜாகரியா, நீரில் மூழ்கியதே இறப்புக்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனை செயல்முறை, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையின் தடயவியல் துறையில், காலை 10 மணிக்குத் தொடங்கி, இன்று மதியம் 2.15 மணிக்கு முழுமையாக முடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இறுதிச் சடங்குகளுக்காக, அனைத்து உடல்களும் அவரவர் குடும்பத்தினரால் எடுத்துக் கொள்ளப்பட்டன.
நேற்று மதியம் 12.50 மணியளவில் நிகழ்ந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட தளத்தின் கீழ் கட்டமைப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரு மீட்புப் படகில் (லைஃப் போட்) ஏறியதாக நம்பப்படுகிறது.
இருப்பினும், அந்தப் படகைக் கட்டியிருந்த கயிறு அல்லது கொக்கி திடீரென நழுவியதில், அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களும் அந்தப் படகுடன் கடலில் விழுந்தனர்.
அந்தச் சம்பவம் மூன்று தொழிலாளர்களைப் பலிகொண்டது. படுகாயமடைந்த மற்றொருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 2:53 pm
ஏழை மக்களுக்காக இரண்டு டன் சாடோ மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது
May 25, 2026, 11:02 am
