செய்திகள் மலேசியா
“ஒற்றுமை இல்லை என்றால் வீழ்ச்சி நிச்சயம்": பி.என் தலைவர்களுக்கு டொமினிக் லாவின் கடும் எச்சரிக்கை
ஷா ஆலம்:
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (கெராக்கான்), பெரிகாத்தான் நேசனல் (பி.என்) கூட்டணியின் அனைத்து தலைமை, உறுப்பினர்களுக்கும், தோல்வியைத் தவிர்ப்பதற்கு ஒற்றுமையைப் பேணுவதன் முக்கியத்துவத்தை நினைவூட்டியுள்ளது.
அதன் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ் ஹோ சாய், வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் அல்லது எதிரிகளை எதிர்கொள்ள முடியும், இருப்பினும், உறுப்பினர்களிடையே ஒரு பிளவு ஏற்பட்டால், அது நிச்சயமாக அந்தக் கூட்டணியின் ஒருமைப்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"வெளியில் உள்ள எதிரிகளை எதிர்கொள்ள முடியும், ஆனால் உள் பிளவு தோல்வியைத் தருகிறது" என்று அவர் திங்கட்கிழமை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த டொமினிக் லாவ், ஒரு அரசியல் அமைப்பின் வலிமையானது, உறுப்பினர்களிடையே உள்ள ஒற்றுமை, ஒருங்கிணைப்பின் உணர்வைப் பெரிதும் சார்ந்துள்ளது என்று விளக்கினார்.
ஒற்றுமைக்கான சூத்திரத்தைப் பேண முடியாவிட்டால், வெளிப்புறத் தாக்குதலைப் பெறாமலேயே, அந்தக் கூட்டணி தானாகவே சரியும் அபாயம் உள்ளது என்றார் அவர்.
"நாம் ஒன்றுபட்டால், நாம் வலிமையடைவோம். நாம் பிளவுபட்டால், எதிரிகள் தாக்க வேண்டிய அவசியமில்லை. நாம் தானாகவே வீழ்ந்து விடுவோம்" என்றார் அவர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 25, 2026, 2:53 pm
ஏழை மக்களுக்காக இரண்டு டன் சாடோ மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது
May 25, 2026, 11:02 am
