செய்திகள் மலேசியா
மலேசிய டிஜிட்டல் உலகில் புதிய அத்தியாயம்: சமூக ஊடகப் பயனர்களுக்கு வயது வரம்பு கட்டாயமாக்கப்படுகிறது
கூச்சிங்:
மலேசியாவில் சமூக ஊடக உலகை தலைகீழாக மாற்றக்கூடிய புதிய விதிமுறையை மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) அறிவித்துள்ளது.
ஜூன் 1 முதல், டிக் டாக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தும் அனைவரும், தங்களது வயதை உறுதிப்படுத்த மைகார்ட், கடவுச்சீட்டு உள்ளிட்ட அரசாங்க ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டியது கட்டாயமாகிறது.
புதிய 'Children’s Protection Code (CPC)' , 'Risk Mitigation Code (RMC)' கீழ், 16 வயதிற்கு குறைவானவர்கள் சமூக ஊடக கணக்குகளைத் திறப்பதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
“வயதை வெறுமனே தாங்களே தெரிவிப்பது இனி போதாது. யாரும் ஒரு கிளிக்கில் 18 வயது என பொய் சொல்லிவிடலாம்,” என்று தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நீ சிங் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள சமூக ஊடக கணக்குகளுக்கும் இந்த விதி பொருந்தும் என எம்சிஎம்சி தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் வயது சரிபார்ப்பு செய்யாத பயனர்களின் கணக்குகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக ஊடக தளங்கள் பயனர்களின் வயதை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என கூறப்பட்டுள்ளது.
மலேசியாவில் 8 மில்லியனுக்கும் அதிக பயனர்களைக் கொண்ட தளங்கள் மீது இந்த புதிய கட்டுப்பாடு கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளது.
இதற்காக டிக் டாக், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் எம்சிஎம்சி தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
தவிர்த்து, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மட்டும், மலேசியாவில் 23,367 ஆன்லைன் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதனால் ஏற்பட்ட மொத்த நஷ்டம் அதிர்ச்சியளிக்கும் வகையில் RM680.3 மில்லியனாக உள்ளன.
இதன் பின்னணியில்தான், குழந்தைகள், இளைஞர்களைப் பாதுகாக்க அரசாங்கம் இணைய பாதுகாப்பு சட்டங்களை இறுக்கி வருகிறது.
இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்த பிறகு, சமூக ஊடகங்களில் “அனானிமஸ்” கணக்குகள், போலி வயது விவரங்கள் மீது பெரிய கட்டுப்பாடு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இணைய சுதந்திரத்துக்கும், பாதுகாப்பிற்கும் இடையே சமநிலையை உருவாக்கும் இந்த நடவடிக்கை, மலேசிய டிஜிட்டல் உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
