செய்திகள் மலேசியா
வெளிநாட்டுத் தொழிலாளர்களை தொடர்ந்து நம்பியிருக்க மலேசியாவால் முடியாது: பிரதமர்
கோலாலம்பூர்:
பொருளாதார சங்கிலியில் தனது நிலையை மேம்படுத்த நாடு முயன்று வரும் நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தொடர்ந்து நம்பியிருக்க மலேசியாவால் முடியாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான சார்புநிலையைக் குறைப்பதற்காக, தொழில்நுட்ப, தொழிற் பயிற்சி (டிவேட்), பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூலம் பயிற்சித் திறன்களை அரசாங்கம் இப்போது விரிவுபடுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
"நாம் உயர் மட்டங்களுக்கு உயரும்போது, மலிவான வெளிநாட்டு உழைப்பை மட்டும் நம்பியிருக்க முடியாது என்பதை உணர்கிறோம்" என்று நேற்றிரவு இங்கு நடைபெற்ற இல்முவான் மலேசியா மதானி தொடர் 12: உலகளாவிய மூலதன ஓட்டத்தின் புதிய அலையில் மலேசியாவின் நிலையை உயர்த்துதல் என்ற மன்றத்தில் அவர் கூறினார்.
டாப் க்ளோவ் கார்ப்பரேஷன் பிஹெச்டியின் எக்செக்குயுடிவ் தலைவர் டான் ஸ்ரீ லிம் வீ சாய், அந்தத் துறையில் தொழிலாளர் திறன்கள், பொறியியல், நிர்வாகத் திறமைகளின் அடிப்படையில் முன்னேற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் இவ்வாறு பேசினார்.
திறமை, செலவுப் போட்டித்தன்மையின் அடிப்படையில் தொழில் துறைக்கு அரசாங்கத்தின் ஆதரவு தேவை என்றும் லிம் கூறினார்.
இதற்கிடையில், மலேசியா தற்போது இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாக அன்வர் கூறினார். இது கவலைக்கிடமான எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.
"எனவே, இதில் கவனம் செலுத்த வேண்டும், மேலும் இது இப்படியே தொடர முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் அவர்.
போட்டித்திறன் தேவைக்கும், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான சார்புநிலையைக் குறைப்பதற்கும் இடையில் ஒரு சமநிலையான தீர்வைக் கண்டுபிடிப்பதற்காக, தொழில் வீரர்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை நடத்தும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
