செய்திகள் மலேசியா
ஜிஎல்சி நிறுவனங்களின் நீண்ட கால முதலீடுகளுக்கு வெளிப்படைத்தன்மை, ஆளுகை ஆகியவை முக்கியமானவை: பிரதமர்
கோலாலம்பூர்:
ஜிஎல்சி நிறுவனங்களின் நீண்ட கால முதலீடுகளுக்கு வெளிப்படைத்தன்மை, ஆளுகை ஆகியவை மிகவும் முக்கியமானவை.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
வெளிப்படைத்தன்மை, நல்ல நிர்வாகம், தெளிவான கொள்கைகள் இருக்கும் பட்சத்தில், இலக்கவியல் பொருளாதாரம் செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஜிஎல்சி நிறுவனங்கள் திட்டமிட்ட நஷ்டங்களை ஏற்பதை அரசாங்கம் வரவேற்கிறது.
நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த முதலீடுகள் இன்றியமையாதவையாக இருந்தால், நஷ்டங்கள் ஒரு பெரிய கவலையல்ல.
வணிக ரீதியான வருமானம் முக்கியமானது என்றாலும், தொழில்நுட்பம், புதிய முயற்சிகளில் செய்யப்படும் நீண்ட கால முதலீடுகள் எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தத் துறையில் முயற்சிகள் எடுப்பது குறித்து அரசாங்கம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
