நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்மொழி இல்லாதது குறித்து திபிஎஸ் பேருந்து நிலைய நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும்: மஹிமா

கோலாலம்பூர்:

திபிஎஸ் பேருந்து நிலையத்தில் உள்ள கியோஸ்க் அமைப்பு, இலக்கவியல் திரைகளில் தமிழ் மொழித் தேர்வுகள் இல்லாதது குறித்து அதன் நிர்வாகம் விளக்கமளிக்க வேண்டும்.

மஹிமாவின் தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினரால் பயன்படுத்தப்படும் முக்கிய மொழிகளில் ஒன்றாக தமிழ் இருந்தபோதிலும், பொது வசதிகளில் அது ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

பல்வேறு இன மக்கள் பயன்படுத்தும் நாட்டின் முக்கியப் போக்குவரத்து மையமாக இருப்பதால், திபிஎஸ் மலேசியாவின் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் கலாச்சாரப் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்க வேண்டும்.

தமிழ் மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் மட்டுமல்ல.

அது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை வழங்கிய இந்தியத் தமிழ் சமூகத்தின் அடையாளம், கலாச்சாரப் பாரம்பரியம்,  நீண்ட வரலாற்றையும் அடையாளப்படுத்துகிறது.

திபிஎஸ் சேவை அமைப்பில் மலாய், ஆங்கிலம், மாண்டரின், பெங்காலி போன்ற பிற மொழி விருப்பங்கள் வழங்கப்படுகிறது.

ஆனால்  தமிழுக்கு அறவே இடம் கொடுக்கப்படாதது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset