நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸ் இகான்மாஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்; டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் சிறப்பு வருகை: டேவிட்

கோலாலம்பூர்:

செராஸ் ஈகான்மாஸ் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் 3ஆவது மகா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

இந்த மகா கும்பாபிஷேகம் வரும் ஜூன் 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணி முதல் 8.40 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த புனித நிகழ்ச்சி, பக்தர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், ஆலயத்தின் சீரமைப்பு,  வளம் பெருக்கத்திற்குமான முக்கியமான திருவிழாவாகும்.

இந்த ஆலயம் Batu 3 1/2, Kawasan Perumahan Sri Pulau Pinang, Jalan Cheras, 56100 Kuala Lumpur என்ற முகவரியில் அமைந்துள்ளது.

பக்தர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு, இறையருளைப் பெறுமாறு ஆலயத் தலைவர் டேவிட் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே இந்த மகா கும்பாபிஷேக விழாவில் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், கூட்டரசுப் பிரதேச தொடர்புக் குழு தலைவர் டத்தோ ராஜா சைமன் உட்பட சிறப்பு பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset