நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனது கைத்தொலைபேசி சில தரப்பினரால் கண்காணிக்கப்பட்டு, உளவு பார்க்கப்படுகிறது: ஜொகூர் மந்திரி புசார் குற்றச்சாட்டு

ஜொகூர்பாரு:

தனது கைத்தொலைபேசி சில தரப்பினரால் கண்காணிக்கப்பட்டு உளவு பார்க்கப்படுவதாக ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி குற்றம் சாட்டியுள்ளார்.

தனது தனிப்பட்ட கணக்குடன் இணைக்கப்பட்ட கைத்தொலைபேசி, ஸ்பைவேர் தாக்குதல் முயற்சி அல்லது கூலிப்படை ஸ்பைவேர் தாக்குதல் குறித்து ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எச்சரிக்கை அறிவிப்பு வந்தபோது தான் இதுபற்றித் தனக்குத் தெரியவந்ததாக அவர் கூறினார்.

தரவுப் பாதுகாப்பு, தகவல் தொடர்பு இரகசியத்தன்மை, தனிப்பட்ட உரிமைகள், ஒருவரின் தனிப்பட்ட வெளிக்குள் அத்துமீற முயற்சித்தல் ஆகியவை இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், நான் இந்த விஷயத்தை மிகவும் தீவிரமாக கருதுகிறேன்.

எந்தவொரு உளவு பார்த்தல், இலக்கவியல் ஊடுருவல், பொறுப்பற்ற நோக்கங்களுக்காக தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் இன்று தனது சமீபத்திய முகநூல் பதிவில் எழுதியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset