செய்திகள் உலகம்
ஈரான் போரில் 42 விமானங்களை இழந்த அமெரிக்கா
நியூயார்க்:
ஈரானுக்கு எதிரான போரில் போர் விமானங்கள், டிரோன்கள் உட்பட 42 அமெரிக்க ராணுவ விமானங்களுக்கு இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டதாக நாடாளுமன்ற ஆய்வு சேவை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுக்கு எதிரான போரின் செலவு, ஏற்கெனவே சுமார் 29 பில்லியன் டாலராக உயர்ந்துவிட்டதாகவும் இந்தச் செலவு அதிகரிப்பில் பெரும் பகுதி, ராணுவ உபகரணங்களை சீரமைக்க அல்லது மாற்றுவதற்கான செலவாகும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.
இழந்த அல்லது சேதம் அடைந்த விமானங்கள் பட்டியலில், நான்கு எப்-15 இ ஈகிள் போர் விமானங்கள், ஒரு எப்-35 லைட்னிங்-2 போர் விமானம், ஒரு ஏ-10 தண்டர்போல்ட்-2 தரைத்தாக்குதல் விமானம், ஏழு கேசி-135 ஸ்ராடோடேங்கர் வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், 24 எம்கியூ-ஏ ரீப்பர் டிரோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
