செய்திகள் மலேசியா
அவதூறு வழக்கின் சமரசமாக ஜமால், கைரியிடம் மன்னிப்பு கோரினார்
கோலாலம்பூர்:
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் சமரசத்தின் ஒரு பகுதியாக, சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனோஸ் இங்குள்ள உயர் நீதிமன்றத்தில் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கடந்த 2022 அம்னோ பொதுச் பேரவையின் போது உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பைக் குறிப்பிட்டு,
நீதிபதி ஆனந்த் பொன்னுதுரை முன்னிலையில் ஜமால் தனது மன்னிப்பு அறிக்கையை வாசித்தார்.
அந்தச் சந்திப்பின் பதிவு அவரது முகநூல், டிக்டாக் கணக்குகளிலும் பதிவேற்றப்பட்டிருந்தது.
செய்தியாளர் சந்திப்பில் ஜமால் கைரியை ஊழல் நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தியதுடன், குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, கட்சிப் பிரதிநிதிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் கைரிக்கு எதிராகத் தான் கூறியவை பொய்யானவை. ஆதாரமற்றவை என ஜமால் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
