நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தை அமினுடின் கலைக்க வேண்டும்: முஹம்மத் ஹசான் பரிந்துரை

சிரம்பான்:

அரசியல் நெருக்கடியைத் தணிப்பதற்கான சிறந்த வழி எனக் கருதிய நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பது குறித்து மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் பரிசீலிக்க வேண்டும்.

வெளியுறவு அமைச்சரும் அம்னோ துணைத் தலைவர்  டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை பரிந்துரைத்தார்.

14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.
இதனால் புதிய மாநில நிர்வாகியைத் தேர்ந்தெடுக்கும் முடிவை எடுப்பதற்கான அதிகாரத்தை அமினுடின் மீண்டும் மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினரின் நம்பிக்கை அமினுடினுக்கு இனி இல்லையென்றால், அவர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, நெகிரி செம்பிலானை மீண்டும் யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடமே ஒப்படைப்பது அவருக்குச் சிறந்ததாக இருக்கும்.

நாம் சத்தம் போட வேண்டாம். அது மக்களுக்கு ஒருவித சங்கடத்தை ஏற்படுத்தும்.

போரினால் உலகம் ஏற்கனவே நிலையற்றதாக இருப்பது போதும், எனவே நம்மால் முடிந்ததைச் செய்வோம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset