செய்திகள் மலேசியா
மலேசிய தேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் வர்த்தக கருத்தரங்கு
கோலாலம்பூர்:
தேசிய வர்த்தக கருத்தரங்கு வரும் ஜூலை மாதம் 2ஆம் தேதி மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மலேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபால கிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.
இந்த தேசிய வர்த்தக தொழில் துறை கருத்தரங்கு கேஎல்சிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்.
இந்த மாபெரும் கருத்தரங்கில் 500 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
துணைப் பிரதமர் டத்தோ ஹாஜி ஃபாடிலா யூசுப் இந்த தேசிய வர்த்தக கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கருத்தரங்கில் வணிகத் தலைவர்கள், தொழில் முனைவோர், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரும் அளவில் கலந்து கொள்கிறார்கள்.
சீர்குலைவு நிறைந்த காலகட்டத்தில் மலேசியாவின் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உலகளாவிய மாற்றம் என்ற கருப்பொருளில் இந்த வர்த்தக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் சிம், தோட்டத் தொழில் மூலத் தொழில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ஆகியோர் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே இந்த வர்த்தக கருத்தரங்கில் ஏராளமான இந்திய தொழில் முனைவோர், வர்த்தகர்கள் கலந்து கொண்டு பயன் அடையும்மாறு மலேசிய தேசிய வர்த்தக தொழில் சம்மேளனத்தின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் குமாரராஜா கேட்டுக் கொண்டார்.
அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழில் முனைவோர், வர்த்தகர்கள் இதில் கலந்து கொள்வதால் அவர்களுடன் புதிய தொழில் தொடங்குவதற்கு இது ஒரு பாலமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த வர்த்தக கருத்தரங்கு தொடர்பாக டத்தோ டாக்டர் குமாரராஜாவை 012-38309009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
