செய்திகள் மலேசியா
மலேசிய பொருட்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா விருப்பம்
கோலாலம்பூர்:
மலேசியப் பொருட்களை இறக்குமதி செய்வதை அதிகரிப்பதற்கும், கொள்முதலை விரிவுபடுத்துவதற்குமான விருப்பத்தை சீனா வெளிப்படுத்தியுள்ளதாக முதலீடு, வர்த்தகம் தொழில்துறை அமைச்சர் (MITI) டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கனி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பொருளாதார உறவுகளின் வலிமையைப் பிரதிபலிக்கும் வகையில், மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா தொடர்வதாக அவர் கூறினார்.
"சீன முதலீடுகளுக்கு நிலையான, சாதகமான, எதிர்பார்க்கக்கூடிய சூழலை வழங்குவதில் மலேசியா உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், அந்த முதலீடுகள் உள்ளூர் நிறுவனங்கள், தொழில்களின் மேம்பாட்டையும் வலுப்படுத்துவதை உறுதி செய்கிறது" என்று சீனாவின் சுஜோவில் நடைபெற்ற APEC வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்திற்கான தனது வேலை பயணத்தின் போது, அவர் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசியா-சீனா பொருளாதார உறவுகள், அவை தொடர்ந்து மூலோபாயமாக வளர்ந்து வருவதைப் பற்றி விவாதிப்பதற்காக நேற்று, ஜொஹாரி, சீன வர்த்தக அமைச்சர் தூதர் வாங் வென்டாவோவுடன் இருபக்கக் கூட்டத்தை நடத்தினார்.
அந்தச் சந்திப்பில், வர்த்தகம், முதலீடு, தொழில்துறை ஒத்துழைப்பு உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளின் அதிகரிப்பு குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
இது, குறிப்பாக உற்பத்தி, தானியங்கி, விவசாயம், சுரங்கம் தொடர்பான பொருட்கள் துறைகளை உள்ளடக்கியதாகும்.
"மிகவும் திறந்த பொருளாதாரமாக, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுடனான வலுவான உறவுகளை மலேசியா மிகவும் மதிக்கிறது" என்றார் அவர்.
வர்த்தகம், முதலீட்டை எளிதாக்கும் முயற்சிகள், பரஸ்பர நன்மை பயக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளிலும் உள்ள நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து, பிராந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
மலேசியா - இந்தியா உறவை மேலும் பலப்படுத்த மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் உறுதி
May 25, 2026, 2:53 pm
