செய்திகள் சிந்தனைகள்
படத்தில் உள்ள இரண்டு நெருப்புச் சுடர்களின் வேறுபாட்டை கவனித்தீர்களா?- வெள்ளிச் சிந்தனை
படத்தில் இருக்கும் இரண்டு நெருப்புச் சுடர்களின் நிற வேறுபாட்டைக் கவனித்தீர்களா? எரியும் வாய்வின் தரம், வேகம், ஆக்ஸிஜன் அளவு ஆகியவைதான் இதற்குக் காரணம்.
முதல் படத்தில் சுடர் நீலமாக இருக்கிறது. இது சிறந்த பாதுகாப்பான நிலை. போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்கிறது என்று பொருள். இதனால் பாத்திரத்தில் புகையோ கரியோ படிவதில்லை. அதேவேளை சமையல் பாத்திரங்கள் வேகமாக சூடாகும். உயர்ந்த வெப்ப நிலையை வெளிப்படுத்தும்.
இரண்டாவது படத்தில் சுடர் ஆரஞ்சு/மஞ்சள் நிறத்தில் இருக்கிறது. காரணம், வாய்வுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை. வாய்வு செல்லும் பாதையில் அடைப்பு இருக்கிறது என்று பொருள். இதனால் பாத்திரங்களுக்கு அடியில் கரி பிடிக்கும். இது அபாயகரமான நிலையாகும்.
இந்நிலை நீடித்தால் உடனே பர்னரை சுத்தம் செய்ய வேண்டும். அல்லது தொழில்நுட்ப வல்லுனரை அழைக்க வேண்டும்.
மனிதன் தயாரித்த கேஸ் அடுப்பின் வெப்ப நிலையிலேயே இவ்வளவு வேறுபாடு இருக்கிறது என்றால்; இறைவன் தயாரித்து வைத்திருக்கும் நரக நெருப்பின் வெப்ப நிலை குறித்து என்ன சொல்வது?!
ஏப்ரல், மே மாத வெயிலின் தாக்கத்தைப் பார்த்தீர்களா? தாங்கவே முடியவில்லை.
இந்த புகைப்படத்தைப் பார்த்தபோது ஒரேயொரு சிந்தனைதான் மனதில் தோன்றியது:
காய்ச்சலின் குறைந்தபட்ச சூடு 98.4 ஃபாரன்ஹீட் என்பார்கள். 100 அல்லது 103 என சூடு அதிகரித்துவிட்டால் பிள்ளையை மருத்துவமனைக்கு எடுத்துக்கொண்டு ஓடுவோம். அப்போது மருத்துவரின் காலில் விழுவதற்கும் சிலர் தயாராக இருப்பார்கள்.
எனில் பல லட்சம் ஃபாரன்ஹீட் சூட்டுடன் நரக நெருப்பு நமக்காக அங்கே காத்திருக்கிறது. அதிலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் காப்பாற்ற என்ன முன்னேற்பாடுகளை செய்திருக்கிறோம்?
நரக நெருப்பு என்பது விளையாட்டல்ல. அது அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு.
நம்மை அழைத்து அல்லாஹ் கூறுகின்றான்:
"இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகும் அந்த நரக நெருப்பில் இருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்!” (66:6)
அந்த நரக நெருப்பில் இருந்து தப்பிக்கவும் நமது குடும்பத்தைக் காப்பாற்றவும் என்ன செய்யப்போகிறோம்..?
- நூஹ் மஹ்ழரி
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
உடல் பருமன் என்பது வெறும் தோற்றப் பிரச்சனையா? - வெள்ளிச் சிந்தனை
September 4, 2026, 8:14 am
உலக வாழ்க்கையை அல்லாஹ் ஏன் தண்ணீருடன் ஒப்பிடுகிறான்? - வெள்ளிச் சிந்தனை
August 31, 2026, 12:36 pm
நேபாள் வெள்ளம் திட்டமிட்ட சதியா?
August 28, 2026, 7:29 am
பெண்களுக்கு கண்ணியம் வழங்கியவர் எவர்? - வெள்ளிச் சிந்தனை
August 21, 2026, 7:35 am
வாழ்க்கைக் கதைகள் நமக்குத் தரும் பாடங்கள் - வெள்ளிச் சிந்தனை
August 17, 2026, 9:49 am
தொப்பையால் ஆபத்து - ஆரோக்கிய சிந்தனை
August 14, 2026, 9:39 am
அப்பாஸிய சகாப்தம் மார்க்க அறிஞர்களை கௌரவித்த உன்னதமான காலகட்டம் - வெள்ளிச் சிந்தனை
August 7, 2026, 9:43 am
வாழும் காலம் எல்லாம் தமிழுக்காகவே வாழ்ந்த இறையருட்கவிஞர் சீனி நைனா முகம்மது நினைவுநாள்
August 7, 2026, 7:17 am
