செய்திகள் சிந்தனைகள்
தடை அதை உடை - வெள்ளிச் சிந்தனை
சிலர் எப்போது பார்த்தாலும் ‘நம்மிடம் தகுதி இல்லையே, திறமை இல்லையே, செயல்பட முடியவில்லையே’ என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
இருக்கிற வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து யோசிக்கவே மாட்டார்கள்.
மறைந்த மார்க்க அறிஞர் எம்.ஏ. ஜமீல் அகமது அவர்கள் தம்முடைய “அழைப்புப் பணி” எனும் நூலில் இப்படிப்பட்டவர்களைக் குறித்து அழகாகப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“நம்மிடம் ஆற்றல்கள் இல்லையே, தகுதிகள் குறைவாக இருக்கின்றனவே என்று நினைத்து கை கட்டிக்கொண்டு உட்கார்ந்து இருந்தால் அது பிரச்னைக்குத் தீர்வு ஆகாது.
இறைவனையே முழுமையாகச் சார்ந்து இருந்து, அவனுடைய அருளை நாடிய வண்ணம் நம்மிடமிருக்கும் ஆற்றல் எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரி- கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் நாம் பயன்படுத்த வேண்டும்.
பிறகு, இறைவனே நம் ஆற்றல்களை வேகமாக வளர்ப்பான்.
“ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்.
சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல வேண்டும் என்பது இறைவனின் கட்டளை என்றால் அதை நிறைவேற்ற நாம் உடனே எழ வேண்டும்.
பயணத்துக்குத் தயாராகிப் புறப்படவேண்டும்.
இவ்வாறு செய்யாமல் வீட்டுக்குள் ஒரு மூலையில் அமர்ந்து வெளிக் கதவு மூடப்பட்டு இருக்கிறதே, எவ்வாறு பயணம் செய்ய முடியும் என்று யோசித்த வண்ணம் இருந்தால் பொழுதுதான் வீணாகுமே தவிர இறைக்கட்டளையை நிறைவேற்றுபவராய் இருக்க மாட்டோம்.
நாம் இருக்கும் இடத்திலிருந்து வெளிக்கதவு 20 அடி தூரம் இருக்கிறது.
இந்த 20 அடியைக் கடந்து செல்ல எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது அல்லவா?
வாய்மையுடன் அந்த 20 அடியைக் கடந்து கதவருகில் செல்ல வேண்டும்.
கதவுக்கு அருகில் சென்ற பிறகுதான் தெரிகிறது, அதற்கு அருகிலேயே சாவி இருக்கிறது என்று.
அந்த 20 அடியைக்கூட கடந்து செல்லாமல் இருந்தால் சாவி இருப்பது எப்படித் தெரியும்?
ஒரு வேளை சாவி இல்லை என்றாலும் கதவைத் திறப்பதற்கு ஏதேனும் கம்பியோ கருவியோ அருகில் இருக்கலாம்.
அல்லது திடீரென்று ஒரு பலத்த காற்று வீசுகிறது..கதவு தானாகவே திறக்கலாம்.
“இந்த மூன்று வகையில் எது நடந்தாலும் சரியே.
அந்தக் கதவுக்கு வெளியே படிக்கட்டுகள் இருப்பதைப் பார்க்கிறீர்கள்.
அதையடுத்து ஒற்றையடிப் பாதை செல்கிறது.
அந்தப் பாதை சாலை வரை செல்கிறது.
அங்கிருந்து நெடுஞ்சாலை.
அதில் நடந்தால் தொடர்வண்டி நிலையமோ விமான நிலையமோ வந்துவிடுகிறது.
நம் இலக்கு வெற்றிபெறுகிறது.
“இறைவனுக்காக- வாய்மையுடன் முதல் 20 அடி எடுத்து வைத்தீர்கள். அதைத் தொடர்ந்து இறையுதவியும் இறையருளும் கிடைத்தன.
முயற்சியே செய்யாமல் தகுதி இல்லையே என்று புலம்புவது எந்தப் பயனையும் தராது.”
“யார் நம் வழியில் முயல்கிறார்களோ அவர்களுக்கு நாம் நம்முடைய வழிகளைக் காண்பிப்போம்.”(குர்ஆன் 29:69)
-சிராஜுல் ஹஸன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 6:40 am
குர்ஆன் கூறும் மரணித்தவர்களின் ஏக்கங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 16, 2026, 12:45 am
தீக்குண்டத்தார் அனைவரும் ஏன் மரணத்தை தேர்ந்தெடுத்தார்கள்? - வெள்ளிச் சிந்தனை
October 9, 2026, 6:59 am
வெளியே அணியும் காலணிகளுடன் வீட்டிற்குள் நுழைகிறீர்களா? - வெள்ளிச் சிந்தனை
October 1, 2026, 11:48 pm
சியோனிஸ்ட்டுகளின் தேர்தல் சதி நாடகம்தாம் விமானக் கத்திக் குத்து
September 25, 2026, 7:34 am
சிங்கத்தின் அருகில் நாய்கள் கூத்தாடுவதால்... வெள்ளிச் சிந்தனை
September 15, 2026, 12:01 am
நினைத்தது ஒன்று! நடந்தது வேறொன்று: பிரிக்ஸ் மாநாடு ஒரு கண்ணோட்டம்
September 11, 2026, 6:33 am
