செய்திகள் மலேசியா
மஇகாவை எந்தவொரு தீய சக்தியாலும் அழிக்க முடியாது; மறுமலர்ச்சியுடன் தேசிய அரசியலில் பயணிக்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
அன்னை மாரியம்மன் தாலாட்டில் பிறந்த மஇகாவை எந்தவொரு தீய சக்தியாலும் அழிக்க முடியாது.
மறுமலர்ச்சியுடன் தேசிய அரசியலில் பயணிக்கும் என்று அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் கூறினார்.
மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை இன்று கூட்டுப் பிரார்த்தனையுடன் தொடங்கியுள்ளது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தான் மஇகா 80 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
அவ்வகையில் இன்று அதே ஆலயத்தில் மஇகாவின் 80ஆம் ஆண்டு நிறைவு விழா தொடங்கியுள்ளது.
இதே போன்று நாடு முழுவதும் 158 ஆலயங்களில் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெறுகிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் இந்த கூட்டுப் பிரார்த்தனைகளில் கலந்து கொண்டுள்ளனர்.
மலேசிய இந்தியர்களின் நலன், உரிமைகளை காப்பதற்காக இந்த மஇகா தொடங்கப்பட்டது.
இதை அடிப்படையாக கட்சியின் மூத்த தலைவர்கள் செயல்பட்டனர்.
ஆனால் ஒரு காலக்கட்டத்தில் இக்கட்சி அரசியலில் பெரும் பின்னடைவை சந்தித்தது.
இந்திய சமுதாயம் மஇகாவுக்கு பாடம் கற்பித்தனர். அதன் பின்னர் பல தலைவர்கள் சமுதாயத்திற்கு பாடம் கற்பித்துள்ளர்.
இதை சமுதாய மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் பதவி, பட்டம் இல்லையென்றாலும் இந்திய சமுதாயத்திற்காக மஇகா உழைத்து வருகிறது.
இதனால் மஇகாவுக்கு மக்கள் மீண்டும் ஆதரவு வழங்க தொடங்கியுள்ளனர்.
தற்போது 80ஆம் ஆண்டு நிறைவு விழாவை மாரியம்மன் ஆலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையுடன் மஇகா தொடங்கியுள்ளது.
ஆக இந்த அன்னை மாரியம்மன் தாலாட்டில் பிறந்த மஇகாவை எந்தவொரு தீய சக்தியாலும் அழிக்க முடியாது என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 4:52 pm
கழுத்தில் ஏற்பட்ட அழுத்ததால் 7 மாத குழந்தை மரணம்
May 21, 2026, 4:12 pm
மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்
May 21, 2026, 4:11 pm
குளியலறையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்
May 21, 2026, 1:15 pm
உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை
May 21, 2026, 12:45 pm
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதற்காக டோனி புவா மீது போலிசார் விசாரணை: டத்தோ குமார்
May 21, 2026, 12:37 pm
