செய்திகள் மலேசியா
கழுத்தில் ஏற்பட்ட அழுத்ததால் 7 மாத குழந்தை மரணம்
சிரம்பான்:
கடந்த செவ்வாய்க்கிழமை, இங்குள்ள பண்டார் ஸ்ரீ சென்டாயனில் உள்ள ஒரு பராமரிப்பாளரின் வீட்டில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக ஏழு மாத ஆண் குழந்தை மரணமுற்றதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று ரெம்பாவ் மருத்துவமனையின் தடய மருத்துவப் பிரிவில், ஐந்து மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனையின் முடிவில் இது தெரிய வந்ததாகச் சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையாளர் அஸாஹர் அப்துல் ரஹீம் தெரிவித்துள்ளார்.
"பிரேத பரிசோதனை, இறந்தவரின் கழுத்தில் அழுத்தம் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது. மேலதிக சோதனை முடிவுகளுக்காக நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
38 வயதுடைய பெண் பராமரிப்பாளர், 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a) கீழ் விசாரணைக்கு உதவும் வகையில், இன்று முதல் மே 25 வரை ஆறு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட பராமரிப்பாளர், சமூக நலத் துறையில் பதிவு செய்யப்படவில்லை, மேலும் தனிப்பட்ட முறையில் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான கட்டணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டுள்ளார்.
இதற்கு முன்னர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு இந்தச் சம்பவம் குறித்த புகாரைத் தாம் பெற்றதாக அஸாஹர் தெரிவித்ததாகத் தெரிகிறது.
குழந்தையின் தாய், தனது மகன் சுயநினைவின்றி இருப்பதாக பராமரிப்பாளர் தனக்குத் தெரிவித்ததாகப் புகார்தாரர் தெரிவித்தார்.
அந்தக் குழந்தை டிசம்பர் 2025 முதல் அந்தப் பராமரிப்பாளரால் பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், சம்பவத்தின் போது, சிலிகான் வகை புட்டிங்கை அவரது வாயில் வைத்து, பராமரிப்பாளர் அந்தக் குழந்தையைத் தொட்டிலில் படுக்க வைத்ததாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மாலை 5.40 மணியளவில், குழந்தையைக் குளிப்பாட்டத் தயாரான போது, அவர் சுயநினைவின்றி இருப்பதை பராமரிப்பாளர் உணர்ந்துள்ளார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
May 21, 2026, 4:12 pm
மலாய் ஒற்றுமை என்பது மற்ற இனங்கள் மீதான விரோதப் போக்கு அல்ல: சிலாங்கூர் சுல்தான்
May 21, 2026, 4:11 pm
குளியலறையில் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட ஆணின் சடலம்
May 21, 2026, 1:15 pm
உயர் போலிஸ் அதிகாரி விழுந்து உயிரிழந்த வழக்கில் குற்றச் செயல் எதுவும் பதிவாகவில்லை
May 21, 2026, 12:45 pm
உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தொட்டதற்காக டோனி புவா மீது போலிசார் விசாரணை: டத்தோ குமார்
May 21, 2026, 12:37 pm
