செய்திகள் உலகம்
எரிமலை வெடித்தாலும் பரவாயில்லை: சிகரங்களை நாடும் மலையேறிகள்
ஜகார்தா:
டுகோனோ (Dukono)வில் அண்மையில் நடந்த வெடிப்புக்குப் பிறகும், மலையேறிகள் அந்நாட்டு மலைச்சிகரங்களை அடையும் முயற்சிகளை கைவிட மறுக்கின்றனர்.
டுகோனோ எரிமலையில் நடந்த அந்த இயற்கைச் சீற்றத்தில் இரு சிங்கப்பூரர் உட்பட, மூன்று மலையேறிகள் சமீபத்தில் மரணமடைந்தனர்.
அத்தகு சம்பவம் நிகழ்ந்திருந்தும் 41 வயதான சிங்கப்பூரரான அன்டின் காதிர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாள்கள், பாலித் தீவின் பதுர் (Batur) எரிமலையில் நடந்த மலையேறும் போட்டியில் கலந்துகொண்டார்.
அந்த எரிமலையும் எந்நேரமும் வெடிக்கக்கூடிய தன்மை உடையதாகும்.
மலையேறிகளுக்கான அப்போட்டியில் ஏழு முதல் அதிகபட்சமாக நூறு கிலோமீட்டர் வரையில் பல தெரிவுகள் போட்டியாளர்களுக்கு அந்த எரிமலையைச் சுற்றி வழங்கப்பட்டன.
ஜாவாவில் உள்ள ராவுங், லொம்பொக்கில் இருக்கும் ரிஞ்ஜானி எரிமலைகளைக் கடந்த சில ஆண்டுகளில் காதிர் ஏறிமுடித்துள்ளார். கிழக்கு நேப்பாளத்தின் காங் யாட்செ இமாலயச் சிகரத்தையும் அவர் ஏறிக் கடந்துள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் மலையேறத் தடை விதித்தால் தாம் அவற்றைக் கடைப்பிடித்து, மலையேறுவதைத் தவிர்த்துவிடுவதாக அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
