செய்திகள் உலகம்
விமானத்தில் மனித இயந்திரம்: அதைத் தடைசெய்த விமான நிறுவனம்
லாஸ் வேகஸ்:
மனிதர்கள் போல, விலங்குகள் போலத் தோற்றமளிக்கும் இயந்திரங்கள் விமானத்தில் பறக்க சவுத்வெஸ்ட் (Southwest) ஏர்லைன்ஸ் தடை விதித்துள்ளது.
லித்தியம் (Lithium) மின்கலன்கள் குறித்த பாதுகாப்பு அக்கறைகளால் அந்த முடிவெடுக்கப்பட்டதாக விமான நிறுவனம் கூறியது.
இம்மாதம் (மே) 10ஆம் தேதி ஸ்டீவி (Stewie) எனும் மனித இயந்திரம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தது.
அது அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரிலிருந்து டாலஸ் நகருக்குச் சென்றது.
அந்தக் காணொலி சமூக ஊடகத்தில் வேகமாக பரவியது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸின் புதிய அறிவிப்பு வந்துள்ளது.
விமானப் பயணத்தால் ஸ்டீவி பிரபலமாகிவிட்டதாக அதன் உரிமையாளர் ஆரன் மெஹ்டிசாடே (Aaron Mehdizadeh) NY Post செய்தியிடம் தெரிவித்தார்.
அவர் மனித இயந்திரங்களை நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விடும் The Robot Studio நிறுவனத்தின் உரிமையாளர்.
விமானத்தில் மனித இயந்திரம் பயணம் செய்வதைக் கண்டு சக பயணிகள் உற்சாகமடைந்ததாக அவர் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
