செய்திகள் மலேசியா
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
கோலாலம்பூர்:
நேற்றிரவு, சபாவின் சண்டாக்கான், பாத்து 12, ஜாலான் ஃபூக் ஹினில் இரண்டு மாடி வீட்டில் தீப்பற்றியதில், 84 வயதுடைய பெண் ஒருவர் கருகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நிக்கோல் என்று அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர், இரவு 10.44 மணிக்கு தீயணைப்பு வீரர்களால் வரவேற்பு அறையில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹரியான் மெட்ரோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் மற்ற ஏழு பேருடன் அந்த வீட்டில் வசித்து வந்ததாகவும், தீ பரவியபோது வீட்டில் சிக்கிக் கொண்டதாகவும் நம்பப்படுகிறது.
இரவு 8.38 மணிக்கு அந்தச் சம்பவம் குறித்த அறிக்கையைத் தாம் பெற்றதாகவும், அதற்குப் பின்னர் 13 பணியாளர்கள், மூன்று தீயணைப்பு வாகனங்களை அனுப்பியதாகவும் சண்டாக்கான் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் ஜிம்மி லாகுங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் மீட்கப்படுவதற்கு முன், இரவு 9.35 மணிக்குத் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலதிக நடவடிக்கைக்காக, பாதிக்கப்பட்டவர் பின்னர் போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜிம்மி கூறினார்.
- சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
