செய்திகள் மலேசியா
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
கோலாலம்பூர்:
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்தானா நெகராவில் நடைபெற்ற விழாவில் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மொத்தம் 15 வெளிநாட்டு மலேசியத் தூதர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
இதில் சுரேஸ் குமார் ரெங்கசாமி சிலி நாட்டின் மலேசிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலி நாட்டின் மலேசியத் தூதராக நியமனம் செய்யப்பட்ட சுரேஸ் குமார் கடந்த 2000 ஆம் ஆண்டில் மலேசிய அரசு சேவைத் துறையில் பணியில் அமர்ந்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அறிவியல் அரசியல் துறையில் மாஸ்டர் பட்டம் பெற்றார்.
மலேசிய வெளியுறவு அமைச்சின் துறையில் பல ஆண்டுகாலம் பணியாற்றி அனுபவம் பெற்றவர்.
தனது தூதரக பணியின் ஆரம்ப ஆண்டுகளில் சுகாதார அமைச்சின் துணை இயக்குனர் பதவியும் வகித்துள்ளார்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு கனடா நாட்டின் துணை தூதராக நியமிக்கப்பட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அவர் விஸ்மா புத்ராவில் தனது பணியை சிறப்பாக செய்தார்.
இப்போது சிலி நாட்டின் மலேசிய தூதராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
