செய்திகள் மலேசியா
ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் உள்ள மத்தியஸ்தப் பிரிவை தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி பயன்படுத்தலாம்: அஸாலினா
கோலாலம்பூர்:
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஆகிய கட்சிகள், தங்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால், அவற்றைத் தீர்ப்பதற்காக, ஏற்கெனவே தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ள மத்தியஸ்த வழிமுறையைப் பயன்படுத்தும்.
மக்களுக்கு உதவுதல், நாட்டை நிர்வகித்தல் ஆகிய பணிகளில் கவனம் சிதறி, நீடித்து நிலைத்திருக்கும் எந்தவொரு சர்ச்சைகளையும் தவிர்ப்பதற்கு இந்த வழிமுறையைப் பயன்படுத்துவது மிகவும் பொருத்தமானது என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் கூறினார்.
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி இடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் ஒரு மத்தியஸ்தப் பிரிவு உள்ளது.
தேசியக் கூட்டணி தகவல் தொடர்பு இயக்குநர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் நேற்று அந்த மத்தியஸ்த பிரிவு பற்றிக் குறிப்பிட்டதாக நான் நினைக்கிறேன்.
என் கருத்துப்படி, எந்தவொரு தரப்பும் திருப்தி அடையவில்லை என்றால், அவர்கள் அந்தப் பிரிவைப் பயன்படுத்த வேண்டும்.
நாம் அரசாங்கத்தை அமைப்பதற்காக ஒன்றாக இணைவதற்கான ஒப்பந்தத்தில் அதுதான் கூறப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
