செய்திகள் மலேசியா
முத்ரா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 220 மில்லியன் ரிங்கிட்; இந்திய தொழில்முனைவர்கள் பயனடைய வேண்டும்: டத்தோஶ்ரீ கோபாலகிருஷ்ணன்
கோலாலம்பூர் -
முத்ரா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 220 மில்லியன் ரிங்கிட் முழுமையாக இந்திய தொழில்முனைவர்களை சென்றடைய வேண்டும்.
இதுவே மைக்கியின் இலக்கு என்று அதன் தலைவர் டத்தோஶ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு முத்ரா திட்டத்திற்காக 220 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
முத்ரா என்பது இந்திய தொழில்முனைவோர் மூலதனம், பொருளாதார ஊக்குவிப்பு திட்டமாகும்.
தெக்குன் நேஷனல் 120 மில்லியன் ரிங்கிட், பேங்க ரக்யாத் 15 மில்லியன் ரிங்கிட், எஸ்எம்இ பேங்க் 50 மில்லியன் ரிங்கிட், அமானா இக்தியார் 27 மில்லியன் ரிங்கிட், மலேசிய கூட்டுறவு ஆணையம் 11 மில்லியன் ரிங்கிட் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த மே 10ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 70 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகையும் முழுமையாக இந்திய தொழில்முனைவர்களை சென்றடைய வேண்டும். இதை அடிப்படையாக கொண்டே மைக்கி ரோட் ஷோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது.
வரும் ஜூன் 5அம் தேதி சிரம்பான், ஜூன் 12ஆம் தேதி கோத்தாபாரு, ஜூன் 13ஆம் தேதி மலாக்கா, ஜூன் 20ஆம் தேதி சுங்கைப்பட்டாணி, ஜூன் 21ஆம் தேதி பேரா, ஜூன் 28ஆம் தேதி ஜொகூர், ஜூலை 4ஆம் தேதி கோலாலம்பூர், சிலாங்கூர் ஆகிய இடங்களை அடுத்து பகாங் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ளது.
ஆக இந்திய தொழில் முனைவர்கள் திரளாக வந்து இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.
குறிப்பாக இத்திட்டங்கள் வாயிலாக நிதிகளை பெறுவதற்கு ஆவணங்கள் மிகவும் முக்கியம். அதை இந்திய தொழில் முனைவர்கள் முறையாக வைத்திருக்க வேண்டும் என டத்தோஶ்ரீ கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2026, 10:40 am
இரண்டு மாடி வீடு தீப்பற்றி எரிந்ததில் மூதாட்டி பரிதாபப் பலி
May 19, 2026, 10:15 am
பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநரைக் காயப்படுத்திய நான்கு இளைஞர்கள்
May 19, 2026, 9:45 am
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
May 19, 2026, 9:33 am
சிலி நாட்டிற்கான மலேசிய தூதராக சுரேஸ் குமார் நியமனம்
May 18, 2026, 5:31 pm
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
May 18, 2026, 5:30 pm
