செய்திகள் மலேசியா
ஷாஆலமில் அனைத்துலக ஃபேஷன், அழகுக்கலை நிபுணர்களுக்கான மாநாடு; அங்கீகரிக்கப்பட்ட தரமான நிபுணர்களை உருவாக்கும்: ஶ்ரீ கீதா
ஷாஆலம்:
அனைத்துலக ஃபேஷன், அழகுக்கலை நிபுணர்களுக்கான மாநாடு அங்கீகரிக்கப்பட்ட தரமான நிபுணர்களை உருவாக்கும் அதன் முதன்மை இலக்காகும்.
ஹெல்திண்ட் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஶ்ரீ கீதா இதனை கூறினார்.
அனைத்துலக ஃபேஷன், அழகுக்கலை நிபுணர்களுக்கான மாநாடு ஷாஆலமில் உள்ள ஐடிசிசி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்திய ஃபேஷன் வடிவமைப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் அரவிந்த் தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.
இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற இம்மாநாட்டில் மலேசியாவைத் தவிர்த்து இந்தியாவில் இருந்தும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
மலேசியாவில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் உலக அளவில் தமிழ் பேசும் ஃபேஷன் வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்களும் தங்கள் திறமைகளை சர்வதேச மேடையில் காட்சிப்படுத்தினர்.
மேலும் உலகெங்கிலும் உள்ள ஆடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனை கலைஞர்கள், ஆரி கைவினைஞர்களை இம்மாநாட்டில் ஒன்றிணைந்தனர்.
ஃபேஷன் துறையில் கலாச்சாரம், புதுமை, சர்வதேச ஒத்துழைப்பு, நிலைத்தன்மையை மேம்படுத்துதல் இம்மாநாட்டில் முக்கிய நோக்கமாக இருந்தது என்று ஶ்ரீகீதா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
