செய்திகள் மலேசியா
மலேசியாவின் மருத்துவ சுற்றுலாத் துறை தொடர்ந்து வலுவாக உள்ளது: அமீர் ஹம்சா
ஜார்ஜ்டவுன்:
மலேசியாவின் மருத்துவ சுற்றுலாத் துறை தொடர்ந்து வளர்ந்து வருகிறது. இது, நாட்டின் உயர்தரமான, மலிவு விலையிலான சுகாதார அமைப்பின் மீது அனைத்துலக சமூகம் வைத்துள்ள தொடர்ச்சியான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார சேவைகள் மீது ஆறு சதவீத விற்பனை, சேவை வரி அமல்படுத்தப்பட்ட போதிலும் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
போட்டித்தன்மை வாய்ந்த செலவில் தரமான மருத்துவ சிகிச்சையை நாடும் வெளிநாட்டு நோயாளிகளுக்கு மலேசியா ஒரு விருப்பமான இடமாகத் தொடர்கிறது.
நாடு தழுவிய முக்கிய சுகாதார மையங்களில் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஶ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
பினாங்கு, ஜொகூர், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மருத்துவமனைகளில் அனைத்துலக நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இது நாட்டின் மருத்துவ சுற்றுலாச் சூழலமைப்பின் நெகிழ்வுத்தன்மையை நிரூபிப்பதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
