செய்திகள் மலேசியா
கிளந்தானில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிப்பு: போலிஸ்
கோத்தாபாரு:
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மாநிலத்தில் கொலைகள் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
கிளந்தான் மாநில போலிஸ் தலைவர் டத்தோ முகமது யூசோப் மாமாட் இதனை கூறினார்.
கடந்த ஆண்டு ஒரே ஒரு கொலை வழக்கு மட்டுமே பதிவான நிலையில், இந்த ஆண்டு இதுவரை ஐந்து கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது,.
மேலும் இந்தக் குற்றச்செயல்களை அதிகாரிகளால் கணிப்பதும் தடுப்பதும் கடினம் என்று அவர் விவரித்தார்.
எல்லா கொலை வழக்குகளும் போதைப்பொருளின் தாக்கத்தால் ஏற்படுவதில்லை என்பதால், அதற்கான சரியான காரணத்தை எங்களால் திட்டவட்டமாகக் கண்டறிவது கடினம்.
உதாரணமாக, விசாரணையில் சந்தேக நபரிடம் போதைப்பொருள் இல்லை என்று கண்டறியப்பட்ட போதிலும், சண்டைகள் கொலையில் முடிந்த சம்பவங்களும் உள்ளன.
இந்த அதிகரிப்பு மிகவும் கவலையளிக்கிறது.
அவதானிப்புகளின் அடிப்படையில், நம்பிக்கைக் குறைவு, மத நம்பிக்கை இல்லாமை ஆகியவையும், தனிநபர்கள் வன்முறையில் ஈடுபடும் அளவிற்கும், பகுத்தறிவை இழக்கும் அளவிற்கும் கோபத்தால் எளிதில் பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணங்களில் அடங்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
