செய்திகள் மலேசியா
நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒற்றுமை அவசியம்: அர்வின் அப்பளசாமி
பாகான் டத்தோ:
நாட்டின் வளரச்சிக்கு சமுக ஒற்றுமை அவசியம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹாமிடியின் சிறப்பு அதிகாரி அர்வின் அப்பளசாமி கூறினார்.
பல இனங்கள் வாழும் இந்த நாட்டில் ஒன்றுபட்ட நிலையில் வாழ்ந்து வருவது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதன் வழி இந்த நாட்டிற்கு சுற்றுப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
இந்த ஒற்றுமை தொடரவேண்டும் என்று பாகான் டத்தோ தொகுயின் ஐபிஎப் மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய அவர் வலியுறுத்தினார்
இங்குள்ள தெலுங்கு சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில பெரும் திரளான ஐபிஎப் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் மேலும் பேசிய அர்விந்த் , அரசியல் கட்சிகள் அரசியல் நோக்கோடு பல நடவடிக்கைகளைக் கொண்டாலும் சமுக. நல தேவைகளுக்கு தொடர்ந்து சேவையாற்ற வேண்டும்.
இந்த தொகுதியில் உள்ள இந்தியர்களின் தேவைகளை அறிந்து அதன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ ஜாஹித் தொடர்ந்து சிறந்த சேவையை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பினாங்கு மாநில ஐபிஎப் கட்சியின் தலைவர் டாக்டர் எஸ். குமரேசன் தேசிய பிரதிநிதியாக கலந்துகொண்டதுடன், அவர் ஆற்றிய உரையில் அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் இல்லை என்றாலும் ஐபிஎப் கட்சி் இந்திய சமுகத்திற்கு முடிந்த சேவைகளை ஆற்றி வருவதாக குறிப்பிட்டார்.
ஐபிஎப் அரசாங்கத்தில அங்கம் வகிக்க முடியாவிட்டாலும் சமுகம் எதிர்நோக்கும் தேவைகளுக்கு முடிந்த சேவைகளை ஆற்றி வருகிறது.
அதே வேளையில் கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கட்சி் தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்று உறுதி அளித்தார்.
மாநில பிரதிநிதியாக ஐபிஎப் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலத்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 6, 2026, 9:38 pm
ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பெர்சமா கட்சி போட்டியிடும்: ரபிசி
June 6, 2026, 9:36 pm
கெடிலான் உதவித் தலைவர்களாக சைபுடின், ஜலேஹா நியமனம்
June 6, 2026, 6:10 pm
15 நாட்கள் மர்மமாக மாயம்: இறுதியில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட ஜாஸ்லிண்டா
June 6, 2026, 5:12 pm
மீன்பிடிக்கச் சென்ற சிறுவர்களுக்கு அதிர்ச்சி: வடிகாலில் ஆடவரின் சடலம் கண்டெடுப்பு
June 6, 2026, 2:38 pm
மாராவின் திவேட் கல்வி திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீத வேலை வாய்ப்பை எட்டியுள்ளது: ஜாஹித்
June 6, 2026, 1:30 pm
