செய்திகள் உலகம்
அமெரிக்க பள்ளிவாசலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொலை: தாக்குதல் நடத்திய 2 இளைஞர்கள் தற்கொலை
சான் டியாகோ:
அமெரிக்காவில் பள்ளிவாசலுக்கு அருகே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நேரப்படி நேற்று நண்பகல் வேளையில், சான் டியாகோ மிகப்பெரிய பள்ளிவாசல் வளாகத்திற்கு வெளியே 17, 19 வயதுடைய இளைஞர்கள் இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
பின் அங்கிருந்து தப்பிய இருவரும் பக்கத்து தெருவில் காரை நிறுத்தி தங்களை தாங்களே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்தனர்.
இதன் மூலம் இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
அதிர்ஷ்டவசமாக பள்ளிவாசலுக்குள் செயல்பட்டு வந்த பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார் மூவரின் உடலை கைப்பற்றினர்.
பின் பக்கத்து தெருவில் காருக்குள் இறந்து கிடந்த இரு இளைஞர்களின் உடல்களையும் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களையும் கைப்பற்றினர்.
பள்ளிவாசலில் இருந்த பாதுகாப்பு அதிகாரி துணிச்சலாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அவர் தனது உயிரை தியாகம் செய்து பலரை காப்பாற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:39 am
சீனாவின் காலணி தொழிற்சாலையில் தீ: 28 பேர் பலி
July 9, 2026, 11:56 am
மேற்கு ஐரோப்பாவில் கடுமையான வெப்ப அலை: ஜூன் மாதம் மிக வெப்பமான மாதமாக பதிவு
July 8, 2026, 9:43 pm
ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தது: டிரம்ப் திடீர் அறிவிப்பு
July 8, 2026, 11:37 am
தாய்லாந்தில் அமைச்சரவை மாற்றமா? பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மறுப்பு
July 6, 2026, 4:54 pm
உலகக் கிண்ணம்: உலக சுற்றுலாவாசிகளைக் கவரும் காபோ வெர்ட்டுக்கு ஒரு சிறந்த விளம்பரம்
July 4, 2026, 3:50 pm
