செய்திகள் உலகம்
ராயல் கிங்க்ஸ் குழுமத் தலைவர் சிராஜுத்தீனுக்கு கலைச் செம்மல் விருது
சிங்கப்பூர்:
அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையைத் தழுவிய ‘மீலாதுன் நபி’ ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் வெகு சிறப்பாக நடந்தேறியது.
தாரகை முத்தமிழ்க் கழகத்தின் ஏற்பாட்டில் அந்தப் படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 10) உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கத்தில் மீண்டும் திரையிடப்பட்டது.
சமூகத்திற்குத் தொடர்ந்து ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி, ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனத் தலைவர் சிராஜுதீனுக்கு ‘சமூகக் கலைச் செம்மல்’ விருதைச் சிறப்பு விருந்தினரும் சிங்கப்பூர் மலாய் வர்த்தகத் தொழிற்சபையின் தலைவருமான முனைவர் அப்துல் மாலிக் வழங்கி கௌரவித்தார்.
“எனக்குத் தமிழ் தெரியாது என்றாலும் துணைவாசகங்களின் (sub title) உதவியுடன் படத்தைப் பார்த்தேன்.
அருமையான அந்தப் படம் மலாய் மொழியில் வெளிவர வேண்டும்; அதற்கான உதவிகளைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன்,” என்று முனைவர் அப்துல் மாலிக் குறிப்பிட்டார்.
விருது பெற்ற ராயல் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான கொடை வள்ளல் சிராஜுதீன், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் சமூகத்திற்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற கொள்கை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
இயக்குநர் மில்லத் அஹ்மதுக்கு ஆவணப்படத்திற்கான விருது ஒன்றும் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்டது.
“அப் படம் பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றுள்ளது. அந்தப் பயணத்திற்கு முன்னதாக, சிங்கப்பூரில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தை எனது உழைப்புக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் அருண் மகிழ்நன், “இது நல்ல படைப்பு. இதில் இயக்குநரின் உழைப்பைக் காண முடிகிறது,” என்று பாராட்டினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 5, 2026, 3:14 pm
அடுத்தடுத்து வெடிக்கும் எரிமலை: இந்தோனேசியாவில் பதற்றம்
June 5, 2026, 12:48 pm
கியூபா அதிபருக்கு அமெரிக்காவின் அதிரடி தடை: சர்வதேச அரசியலில் புதிய பரபரப்பு
June 5, 2026, 11:27 am
தாகத்தின் கொடூரம்: சஹாரா பாலைவனத்தில் 49 பேர் பரிதாப பலி
June 5, 2026, 9:56 am
புறப்படுவதற்கு முன் பரபரப்பு:.லுஃப்தான்சா ட்ரீம்லைனர் திடீரென சாய்ந்து விபத்து
June 4, 2026, 2:39 pm
ஆசியான் நாடுகளுக்கான பிரம்மாண்டமான புதிய கடல்வழிப் பாதை: சீனாவின் வரலாற்றுச் சாதனை
June 3, 2026, 2:43 pm
ஐ.நா. சபையின் புதிய தலைவராகிறார் வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான்
June 3, 2026, 12:01 pm
ஜப்பானை உலுக்கிய ஜாங்மி புயல்: உச்சக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
June 3, 2026, 10:07 am
2026 உலகக்கோப்பை சர்ச்சை: பிரபல சுவரோவிய கலைஞர் ஃபிஃபா மீது வழக்கு
June 2, 2026, 5:22 pm
